• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது.

by Tamil2daynews
February 25, 2021
in சினிமா செய்திகள்
0
சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது.
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
                   
தறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. சமுத்திரகனி , கருணாஸ் , ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறை படைப்பாளி. இருவரும் சிறு வயது முதல் நண்பர்களும்கூட. இப்படத்தினை உதய் புரடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .
                                            
நடிகர் கருணாஸ் பேசியது,
வாய்ப்பளித்த மணிமாறன் அவர்களுக்கு நன்றி. இப்படியான படத்தை தயாரித்த வெற்றிக்கும் நன்றி. அசுரனில் என் மகனுக்கு வெற்றிமாறன் மூலமாக எப்படி ஒரு பெயர் கிடைத்ததோ..அதேபோல் எனக்கு இந்தப்படம் மூலமாக ஒரு வாய்ப்பை வெற்றிமாறன் தயாரிப்பில் கொடுத்திருக்கிறார். நாவல் எழுதிய பாரதிநாதன் சாருக்கும் நன்றி. பொல்லாதவன் படத்தில் இருந்தே வெற்றிமாறனைப் பார்த்து வருகிறேன். அதேபோல் வெற்றிமாறனும் மணிமாறனும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இரண்டு பேரும் சண்டைப்போடுவார்கள். ஆனாலும் நட்பைப் பேணி வருகிறார்கள். இப்படியான நண்பர்களோடு இணைந்து வேலை செய்தது பெருமையாக இருக்கிறது. படத்தில் என் மாப்பிள்ளை சமுத்திரக்கனி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்

வெற்றிமாறன் பேசியது

“சங்கத்தலைவன் படம் ஒரு பெட்டரான படம். இந்தமாதிரியான கதையை படம் பண்ணுவது என்பது இங்கு பெரிய சாதனையான விசயம். இந்தப்படத்தை எடுக்க வேண்டும் என்று கருணாஸ் உதயா வலியுறுத்தினார்கள். இந்தப்படத்திற்கு சமுத்திரக்கனி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அவரும் வந்தார். இந்தப்படத்திற்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.
இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான டென்சனை இப்போது தான் சந்திக்கிறேன். எனக்கு தியேட்டர்களில் நேரடியாக படத்தை வெளியிட்ட அனுபவம் கிடையாது. அதனால் இந்தப்படம் வெளியாக தாணு சார் தான் நிறைய உதவிகளைச் செய்து வருகிறார். இந்தப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
             
             
நடிகர் சமுத்திரக்கனி பேசியது
“சங்கத்தலைவன் நானும் இப்போது தான் பார்த்தேன். பிரமிப்பாக இருக்கிறது. இந்தப்படத்திற்காக நிறைய உழைச்சிருக்கோம். இந்தக்கதையை நாவலாக எழுதியிருந்த பாரதிநாதன் அவர்களுக்கும், அழகாக எடுத்திருந்த மணிமாறன் அவர்களுக்கும், படத்தை தயாரித்த எங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். இறைவன் கொடுத்த பரிசாக தான் இந்தப்படத்தைப் பார்க்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி” என்றார்
                                        

இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியது,

“இந்தப்படம் தந்த வெற்றிசார் மணிமாறன் சார் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை அனைவரும் பாருங்கள். படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி” என்றார்இயக்குநர் மணிமாறன் பேசியது
“இந்தக்கதையை ரொம்ப சாதாரணமா சொல்லிடலாம். ஆனால் சில கன்டென்ட்கள் புரியாது. வெற்றிமாறன் சாருக்கு தயாரிப்பாளரா இந்தப்படம் மீது ஒரு பயம் இருந்திருக்கும். இப்போது கூட இருக்கும். ஏன் என்றால் படத்தில் பேசி இருக்கும் விசயங்கள் அப்படியானது.  அனைவருக்கும் நன்றி” என்றார்

Press Meet Video Link – https://we.tl/t-nki3EYXMZj
                                                  
Previous Post

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்

Next Post

எனக்கும் அதற்க்கும் சம்பந்தமில்லை-அஸ்வின்..!

Next Post
எனக்கும் அதற்க்கும் சம்பந்தமில்லை-அஸ்வின்..!

எனக்கும் அதற்க்கும் சம்பந்தமில்லை-அஸ்வின்..!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.