• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

” தீ இவன் ”  படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்

by Tamil2daynews
March 9, 2021
in சினிமா செய்திகள்
0
” தீ இவன் ”  படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்
0
SHARES
130
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத்  படத்தை தயாரித்தவருமான  டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த குணசித்திர நடிகர் பெராரே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது: லீ இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு தரும் படமாக இது உருவாகி உள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் அதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.

படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட  படப்பிடிப்பு  நடந்து வருகிறது.  ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும்.

அது மட்டுமல்லாது ஹம்மர் என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து  பாடல் காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம் அதுவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் வெளியானபிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக  நிச்சயம் நடிப்பார்.

500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி ஒன்றை  பிரமாண்டமாக அண்மையில் படமாக்கினோம். கொரோனா காலம் என்பதால் பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. ஓடிடி தளங்களில் இருந்து பேசினாலும், படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என்கிறார் படத்தின்  இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன்.

ஒளிப்பதிவு  –  ஒய்.என்.முரளி

பிண்ணனி இசை, எடிட்டிங்  –  அலிமிர்சாக்

கலை இயக்கம் –  சோலை அன்பு

நடனம்  – கூல் ஜெயந்த்

ஸ்டண்ட் – கிக்காஸ் காளி

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு நிர்வாகம்  –  அப்பு

கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் – டி.எம்.ஜெயமுருகன்

 

Previous Post

சாரிகா – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட திகில் கலந்த விழிப்புணர்வு குறும்படம்!!

Next Post

பாரதிராஜாவின் முக்கிய அறிவிப்பு..!

Next Post
பாரதிராஜாவின் முக்கிய அறிவிப்பு..!

பாரதிராஜாவின் முக்கிய அறிவிப்பு..!

Popular News

  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

    0 shares
    Share 0 Tweet 0
  • SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.