• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார், அஷிமா நர்வால்

by Tamil2daynews
March 16, 2021
in சினிமா செய்திகள்
0
ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார், அஷிமா நர்வால்
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.  “கொலைகாரன்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இவர், “பிட்ட கதலு” ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘பிங்கி’ எனும் பகுதியில் இந்து கதாப்பாத்திரத்தில் மிக அருமையான நடிப்பை வழங்கி, அனைவரையும் கவர்ந்துள்ளார்.


இது குறித்து நடிகை அஷிமா நர்வால் கூறியதாவது…


தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள், பலவித காரணங்களால்,  என் வாழ்வின் சிறப்பு மிக்க தருணமாகியுள்ளது. முதல் காரணம் Netflix போன்ற உலகளாவிய மிகப்பெரும் புகழ் கொண்ட நிறுவனத்தின், முதல் தென்னிந்திய  ஆந்தாலஜி படத்தில் பங்கு கொண்டதாகும்.  அடுத்தது தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளான சங்கல்ப் ரெட்டி, நடிகர் சத்யதேவ் காஞ்சர்னா, ஈஷா ரெப்பா, ஶ்ரீனிவாஸ் அவரசலா ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்ததாகும். படத்தின் அனைத்து வேலைகளும் கடந்த வருடமே முடிந்த நிலையிலும், பொதுமுடக்கத்தினால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இறுதியாக தற்போது எங்களது திரைப்படம் உலகின் புகழ்மிகு நிறுவனமான Netflix ல் வெளியாகியிருப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
Netflix நிறுவனம் உலகம் முழுக்க 190 நாடுகளில், மிகப்பெரும் பார்வையாளர்களிடம் படத்தினை கொண்டு சென்றுள்ளது. இணையம் வழி, ஆஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள், எனது நடிப்பினை கண்டுகளித்தது ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. “பிட்ட கதலு” திரைப்படம் மிகப்பெரும் புகழினை பெற்று தந்துள்ளது. நிறைய நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வர ஆரம்பித்துள்ளது. தற்போது சில தெலுங்கு திரைக்கதைகளை படித்து வருகின்றேன், விரைவில் சில படங்களை ஒப்பந்தம் செய்யவுள்ளேன். திரை வாழ்வில் எப்போதும் தனித்துவமிக்க கதைகள் மற்றும் சவாலான பாத்திரங்கள் செய்யவே ஆசைப்படுகிறேன். இனிவரும் காலங்களிலும் ரசிகர்கள் பாராட்டும் வகையிலான படங்களை கதாப்பாத்திரங்களை தொடர்ந்து செய்வேன்.
Previous Post

முதல்வர் வேட்பாளர்கள் கவனத்திற்கு!

Next Post

சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

Next Post
சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.