• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலைக்கு கமல் , அஜித் செய்த துரோகம்..!

by Tamil2daynews
April 8, 2021
in சினிமா செய்திகள்
0
கலைக்கு கமல் , அஜித் செய்த துரோகம்..!
0
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*பரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் – இயக்குநர் அதிரடி*
இயக்குநர் கே.ஸ்ரீராம்  முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். பரதம் சம்மந்தமான கதைக்கு இன்றைய அவசியம் என்ன என்பதை இயக்குநர் ஸ்ரீராம் நம்மிடம் தெரிவித்தார்.
நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி,  மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
நானும் இதே துறைக்கு வந்து விட்டேன். இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு  விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நடித்த ‘வரலாறு’ படத்தில் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதாக காட்டப்படும். அதே போல ‘விஸ்வரூபம்’ படத்திலும் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால் மனைவி  வெறுப்பதாக காட்டப்பட்டிருக்கும். பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி  யாருமே கவலைப் படவில்லை. இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.
இது தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நானே ‘குமார சம்பவம்’ என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். நான் பரதத்தை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக  பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். பஞ்சபூதங்கள் பற்றியும், ஐந்திணைகள், நவக்கிரகங்கள் பற்றியும் நாட்டியத்தில்  சொல்லி வருகிறேன். கிராமத்துக் காவல் தெய்வங்களான ஏழு முனிகள் பற்றிய  நாட்டியத்தையும் ஆடியிருக்கிறேன். கார்கில் போர் நடந்தபோது அதைப் பற்றியும் பரதத்தில் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது. அதுதான் என்னுடைய நோக்கம்.
படத்தில் என்னோடு நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பிரதி தயாராக இருக்கிறது. விரைவில் வெளியாகும் என்றார் ஸ்ரீராம்.
Previous Post

*அஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே செய்தார் ; குமார சம்பவம் இயக்குனர் குமுறல்*

Next Post

“Black Widow”  படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Next Post
“Black Widow”  படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

“Black Widow”  படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.