• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !

by Tamil2daynews
April 27, 2021
in சினிமா செய்திகள்
0
கார்த்தி நடிக்கும்  புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல்  “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று பொருள் தரும்.
இதில்  ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’  ஆகிய படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் P.S.மித்ரனுடன் நடிகர்  கார்த்தி முதன்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தில் 2 கதாநாயகிகள்.  ராஷிகண்ணா மற்றும் ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் . மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு  மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர்  சுயாஸ் பாண்டே (Chunky Panday) முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார்.
கனமான  கதைகளையும் கடினமான கதாபாத்திரங்களையும்  தேர்ந்து எடுத்து  நடிப்பவர் கார்த்தி. இயக்குனர் PS மித்ரன் சமூக சிந்தனைகளும் நவீனத்துவம் பறைசாற்றும் விதமாக அவரது முந்தைய படங்களை இயக்கியிருக்கிறார்.  இவர்கள் இருவரும் சேர்ந்து  இப்படத்தில் அழுத்தமான ஒரு கதைக்களத்தில்  பயனிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
படத்தின் கதை வெவ்வேறு விதமான இடங்களில் பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன்  நடப்பதால்,  தென்காசி  தொடங்கி சென்னை  மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பினை நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர்.
 ‘சூரரை போற்று’, ‘அசுரன்’ போன்ற வெற்றி படங்களில் பிரம்மாண்ட இசை அமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் ‘சர்தார்’ படத்திற்கு இசை அமைப்பது மேலும்  பலம் சேர்க்கிறது
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்   S.லக்‌ஷ்மன்குமார் இப்படத்தை  மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார்.   ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன், கலை இயக்கம் – கதிர், எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜூ மற்றும் பிபின்ரகு, ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D, பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன்,  தயாரிப்பு மேலாளர் J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி, ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார், புரோமோ ஸ்டில்ஸ் ஜோசஃப் M டேனியல்,  விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் S,  நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, PRO- ஜான்சன்.
Previous Post

ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வெளியீடு !

Next Post

Samuthrakani Birthday Celebration – Stills

Next Post
Samuthrakani Birthday Celebration – Stills

Samuthrakani Birthday Celebration - Stills

Popular News

  • பூனைக்கு யார் மணிகட்டுவது..?

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.