• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல்  தமிழிசைக் கொண்டாட்டம்

by Tamil2daynews
May 11, 2021
in சினிமா செய்திகள்
0
கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல்  தமிழிசைக் கொண்டாட்டம்
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் ஏப்ரல் 18 முதல் முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. நாட்படு தேறல் தொடரின் நான்காம் பாடலாக ‘தமிழ் ஈழக் காற்றே’ என்ற பாடல் நேற்று வெளியான. இசை : இசை அரசன், குரல் : சத்யபிரகாஷ், இயக்கம் : ஜீவா முகுந்தன்.
பாடல் வரிகள் :
தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழிவந்து வீசு – எங்கள்
மண்ணின் சுகம்கண்டு பேசு
*
உயிரைக் கொடுத்த அன்னை
கயிறாய்க் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய்க் கிடப்பாரோ?
நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்லசேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?
ஓடிய வீதிகள் சுகமா – எங்கள்
ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா? – உடன்
படித்த அணில்கள் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
*
முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே!
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே!
பிள்ளைக் கறிகள் சமைத்து முடித்த
தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?
வன்னிக் காடுகள் சுகமா? – எங்கள்
வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா? – இன்னும்
காயாத குருதியும் சுகமா?
ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்
உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ
Previous Post

“நிலைகெட்ட மனிதர்கள்” சமூக (கல்வி ) பிரச்சனையை பேசும் Pilot Film

Next Post

கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் “தி நைட்”  படத்தின்  படப்பிடிப்பை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

Next Post
கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் “தி நைட்”  படத்தின்  படப்பிடிப்பை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் "தி நைட்"  படத்தின்  படப்பிடிப்பை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.