• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

திட்டம் இரண்டு – விமர்சனம்

by Tamil2daynews
August 1, 2021
in விமர்சனம்
0
திட்டம் இரண்டு – விமர்சனம்
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னைக்குப் புதிதாக வருகிறார் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது பேருந்தில் சுபாஷ் செல்வமைச் சந்திக்கிறார். இருவரும் நட்பாகிறார்கள். சென்னைக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதல் வழக்கே, மர்மமான முறையில் காணாமல் போன அவருடைய நீண்ட காலத் தோழியான அனன்யாவைத் தேடுவதுதான். அவரைத் தேடும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் என்ன, அனன்யா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா, என்பதுதான் ‘திட்டம் இரண்டு’ படத்தின் திரைக்கதை.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திருச்சியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இதற்காக ஊரில் இருந்து வரும் போது, நாயகன் சுபாஷ் செல்வத்தை பஸ்சில் சந்திக்கிறார். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் பணிக்கு சேர்ந்த சமயம், அவரின் நெருங்கிய தோழி காணாமல் போகிறார்.
இதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, தோழி விபத்தில் இறந்ததாக தகவல் கிடைக்கிறது. ஆனால் இது கொலை என்று நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலையாளியை தேட ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுபிடித்தாரா? அவரின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருடைய நடிப்பு மற்றும் மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராஜ சுபாஷ் செல்வம். அவருடைய நடிப்பு சில இடங்களில் சரியாக எடுபடவில்லை. ஆனாலும், ஒரு நம்பிக்கைக்குரிய அறிமுகம்தான்.

இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அனன்யா. மொத்தப் படத்தில் இவருடைய நடிப்பு மட்டும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதால் இவர் மட்டும் தனியாகத் தெரிகிறார். இப்படித்தான் இந்தக் கதாபாத்திரம் என்றாலும், இப்படி மட்டுமேதான் நடிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. பாவல் நவகீதன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்கள் கதையை நகர்த்த உதவியுள்ளன.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், வித்தியாசமான கதையை அழகாக சொல்லி இருக்கிறார். படம் முழுவதும் யூகிக்க வாய்ப்பு கொடுத்து, நழுவியது அபாரம். பிளாஷ்பேக் கதைக்கான மெனக்கெடலும், அதை சர்ச்சைக்கு இடமின்றி சொன்ன விதமும் அற்புதம். முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்து, அழுத்தமான கருத்தை சொல்லி இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
 கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும், சதிஷ் ரகுநாதனின் இசையும் எளிமையாக இருந்தாலும், கதாப்பாத்திரங்களைப் போல், காட்சிகளுடனே பயணித்துள்ளது
Previous Post

வெளியானது மோஷன் போஸ்டர் !, ஆரம்பமானது “வலிமை” கொண்டாட்டம் !

Next Post

சென்னையில், இந்தியா – நமீபியா வர்த்தக உச்சி மாநாட்டை, நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Next Post
சென்னையில், இந்தியா – நமீபியா வர்த்தக உச்சி மாநாட்டை, நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

சென்னையில், இந்தியா - நமீபியா வர்த்தக உச்சி மாநாட்டை, நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.