• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சமுத்திரகனியின் ‘ஏலே’!

by admin
May 5, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
சமுத்திரகனியின் ‘ஏலே’!
5
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அவர்களின் அடுத்த திரைப்படம் ‘ஏலே’. Wall Watcher Films தயாரிப்பு.

சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடிக்க, ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் ஒரு ‘நியோ ரியலிஸ்டிக் காமெடி படம் தான் ‘ஏலே’. எஸ்.சசிகாந்த் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சசிகாந்த் கூறும்போது, “கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களை கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிய சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அப்போது தான், சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்களை கண்டறிந்து அவற்றை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல முடியும். ‘வால்வாட்சர் ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ள இயக்குனர்கள் புஷ்கர் & காயத்ரி இந்த முயற்சியில் எங்களுடன் கைகோர்க்க முன்வந்திருக்கின்றனர். ஏலே என்ற இந்த படத்தில் நாங்கள் இணைந்து பணிபுரிகிறோம்” என்றார்.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிபாசிஷ் சர்கார் கூறும்போது, “இந்த மாதிரியான நல்ல கதைகளை கண்டுபிடித்தல், அதை தாங்குதல் மற்றும் தயாரித்தல் என்ற இந்த ஒருங்கிணைந்த மாதிரி, தமிழ் சினிமாவுக்கு ஒப்பீட்டளவில் மிகவும் புதியது. இது படைப்பாளிகளுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் உற்சாகமான தருணம்” என்றார்.

புஷ்கர் & காயத்ரி கூறும்போது, “பெரிய திரையில் நாம் விரும்பும் கதைகளை கொண்டு வரும் கனவு எங்களுக்குள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது ஹலிதா ஷமீம் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. எனவே, எஸ்.சசிகாந்த் இந்த மாதிரியான ஒரு யோசனையை கொண்டு வந்தபோது, நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க உடனே ஒப்புக் கொண்டோம்” என்றனர்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய, இப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் “ஏலே” படத்தை நான் இயக்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வழிக் காட்டிகள்,புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் எனது கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருப்பது மேலும் மகிழ்ச்சி. இந்த மாதிரி கதையம்சம் உள்ள திரைப்படங்களை வழங்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கும் YNOT ஸ்டுடியோஸ் சசிகாந்த்திற்கு ஒரு பெரிய நன்றி” என்றார்.

மே 3ஆம் தேதி பழனியில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும்.

நடிகர்கள்: சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர்.

Previous Post

ஒன்பது கெட்டப்பில் ஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’!

Next Post

ஹரீஷ் கல்யான் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’

Next Post
ஹரீஷ் கல்யான் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’

ஹரீஷ் கல்யான் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’

Popular News

  • ‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

    ‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.