


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் பொதுக்கூட்டத்தில் பேசியவை இங்கே பகிரப்பட்டுள்ளது
உங்களால் நம்ப முடிகிறதா, ஒரே ஆண்டில் 12,000 யூனிட் ரத்தம் கொடுத்துருக்கிற ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தமிழ்நாடு அரசே நாங்கள் 12,000 யூனிட் ரத்தம் கொடுத்தோம் என்பதை பாராட்டி எங்களுக்கு சான்றிதழ் கொடுத்தது. எ
இன்றும் மருத்துவமனையில் அவசரம் என்றால் என் கட்சியினருக்கு தான் அழைப்பு வரும் குருதிக்கொடை வேண்டும் என்று, நாங்களும் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். அதே போல் நூற்றுக்கணக்கான குளங்கள் ஏரிகளை தூர்வாரி இருக்கிறோம். பல லட்சக்கணக்கான பனை விதைகளை விதைத்து வளர்க்கிறோம். பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறோம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று. எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது, எல்லா மொழிவழி தேசிய இனங்களையும் போல உரிமை பெற்று எங்கள் இன மக்களும் பெருமையுடன் வாழ வேண்டும் என்று.









