• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சமந்தாவின் பெருந்தன்மை விவாகரத்து விவகாரம்…

by Tamil2daynews
October 4, 2021
in சினிமா செய்திகள்
0
சமந்தாவின் பெருந்தன்மை விவாகரத்து விவகாரம்…
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழில் முன்னணி நடிகையாக இருந்து தெலுங்கில் கால்பதித்து அங்கும் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் சமந்தா அக்கினெனி.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நாகசைதன்யா – சமந்தா பிரிவு இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமந்தா, நாக சைதன்யா இருவருமே இன்று மதியம் இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக தாங்கள் கணவன் – மனைவி என்கிற குடும்ப உறவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்திருக்கிறார்கள். இருவரின் அறிக்கையிலும் பெயர் மட்டுமே மாறி இருந்ததே தவிர வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை.
சமந்தா சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர். ‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனால், இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடத்தார். தமிழில் சிம்பு – த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நாக சைதன்யா – சமந்தா நடித்தனர். இது நாக சைதன்யா, சமந்தா இருவருக்குமே இரண்டாவது படம்.
நாக சைதன்யா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மகன். இரண்டாவது பட நாயகியான சமந்தாவோடு நல்ல நட்போட பழக ஆரம்பித்தார் சைதன்யா. ‘மனம்’, ‘ஆட்டோநகர் சூர்யா’, ‘மஜிலி’ என இருவரும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துவந்த நிலையில் நட்பு காதலானது. இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என இரண்டு ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு இறுதியாக 2017-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், நான்கு வருட திருமண வாழ்க்கை எதிர்பாராத வகையில் இப்போது விவாகரத்துக்கு வந்திருக்கிறது.
ட்விட்டரில் ‘சமந்தனா அகினேனி’ என இருந்த பெயரை வெறும் ‘S’ என சமந்தா மாற்றியதில் இருந்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்கிற செய்தி பரவ ஆரம்பித்தது. மீடியாக்கள் இதுகுறித்து கேட்டபோது இருவரும் அதற்கான பதிலை நேரடியாக தரவில்லை.
ஐதரபாத்தில் சமந்தா தன் பெயரில் வாங்கிய வீட்டில்தான் திருமணத்துக்குப்பிறகு இருவரும் குடியிருந்தனர். ஆனால், கடந்த லாக்டெளனின்போது நாகசைத்தன்யா இந்த வீட்டில் இருந்து பிரிந்து தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது. இருவரையும் சேர்த்துவைக்கப் பலரும் முயன்று முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் ஜீவனாம்சம் குறித்து பேச்சுகள் ஆரம்பித்திருக்கின்றன. நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜூவனாம்சாகத் தர முன்வந்திருக்கிறது. ஆனால், ‘’நான் நன்றாக சம்பாதிக்கிறேன். எனக்கு எந்த பண உதவியும் வேண்டாம்’’ என மறுத்திருக்கிறார் சமந்தா.
இருவரின் விவாகரத்து வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.
Previous Post

உள்ளாட்சித் தேர்தலில் கலக்கும் நாம் தமிழர் சீமான்

Next Post

*India’s biggest superstar Prabhas’ 25th film is around the corner.*

Next Post
*India’s biggest superstar Prabhas’ 25th film is around the corner.*

*India’s biggest superstar Prabhas’ 25th film is around the corner.*

Popular News

  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.