• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை” ; சனம் ஷெட்டி..! 

by admin
May 12, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
சினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை” ; சனம் ஷெட்டி..! 
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.
‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.. சாதாரண நடுத்தர வீட்டுப்பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.
.
சனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டிக்கெட்’ என்கிற ஃபேண்டஸி  படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தவிர தற்போது  வெப் சீரிஸ்  பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக வெப் சீரியஸ் என கேட்டால், “தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல ஒரு நடிகையாக வெப் சீரிஸ் மற்றும் சினிமா இரண்டுக்கு பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. இரண்டுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள் தான் வேறு. தமிழில் வெப் சீரிஸ்கள் ரொம்பவே குறைவாக வருகின்றன. ஆனால் இதற்கான பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.. அதனால் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்கிறார்.
வெப் சீரிஸ் என்கிற பெயரில் சென்சார் அனுமதி தராத விஷயங்களையெல்லாம் உள்ளே புகுத்துவது நியாயமா என்கிற ஒரு கேள்வியையும் அவரிடம் கேட்டால், “கதையை இயல்பான விதத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக சில நேரத்தில் எதார்த்தமாக சில விஷயங்களை இணைத்திருப்பார்கள்.. அதில் நாம் தவறு கண்டுபிடித்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் சனம்ஷெட்டி.
Previous Post

Actress Shirin Kanchwala Photos

Next Post

மார்கெட் ராஜா MBBS படத்தில் இணைந்த நிகிஷா படேல்

Next Post
மார்கெட் ராஜா MBBS படத்தில் இணைந்த நிகிஷா படேல்

மார்கெட் ராஜா MBBS படத்தில் இணைந்த நிகிஷா படேல்

Popular News

  • தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

    0 shares
    Share 0 Tweet 0
  • AJ Fiilms தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” !

    0 shares
    Share 0 Tweet 0
  • டென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்!!

    5 shares
    Share 5 Tweet 0
  • ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தனது இசை பயணத்தை தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.