• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

by Tamil2daynews
October 28, 2021
in சினிமா செய்திகள்
0
NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!


இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர்
டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

அக்டோபர் 28, 2021 : தீய சக்தியை வென்று, உலகை காக்கும் அதி சக்தியை தரிசிக்க நீங்கள் தயாரா?. NETFLIX இன்று மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  90 களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படம் மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றியிராத மாறுபட்ட தோற்றத்தில் சூப்பர்ஹீரோவாக காட்டியுள்ளது. இவர் பல திறமை வாய்ந்த நடிகர்களான குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனத்தின் சார்பில், ஷோபியா பால் தயாரிக்க, பாசில் ஜோசப் இயக்கியுள்ள “மின்னல் முரளி” திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.  மலையாள மொழியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களிலும்   வெளியிடப்படவுள்ளது

படம் குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது..
காமிக் புத்தகத்தில் தொடங்கி திரைப்படங்கள் வரை சூப்பர் ஹீரோ கதைகளுக்கு நான் எப்பொழுதும் ரசிகன்.  நான் ரசிகர்கள் ரசிக்கும் படியான ஒரு மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ கதையை உருவாக்க விரும்பினேன். மின்னல் முரளியால் அந்த கனவு நினைவாகியுள்ளது. இந்த வாய்ப்பை அளித்த Weekend Blockbusters-நிறுவனத்திற்கு நன்றி. டோவினோ உடைய அர்பணிப்பும், Netflix உடன் இணைந்ததும் எங்களது கனவு நினைவாக்க உதவியுள்ளது.

மின்னல் முரளி பற்றி டோவினோ தாமஸ் கூறியதாவது,
மின்னல் முரளி படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக,  அனைவரையும் திரையுடன் கட்டிபோட்டு வைக்கும்படியான கதை. என்னுடைய கதாபாத்திரம் இதில் புதிரானதாக புதியதாக இருக்கும். சூப்பர்ஹீரோ மின்னல் முரளி எனப்படும்  ஜெய்சன் பாத்திரத்தில் நடிக்கிறேன். இடியால் தாக்கபட்டு, சூப்பர் ஹீரோ சக்திகளை பெரும் ஒருவனது கதை. மின்னல் முரளி கதாபாத்திரத்தை செய்வது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. பாசில் ஜோசப் உடைய பணி அளப்பறியது. உலகெங்கிலும் உள்ள மக்கள் எங்கள் திரைப்படத்தை காணப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

 

Weekend Blockbuster  நிறுவனம் சார்பில், ஷோபியா பால் கூறியதாவது…

நாங்கள் பெரும் சவால் தரக்கூடிய மிகச்சிறந்ததொரு  படத்தை உருவாக்குவதை அறிந்திருந்தோம், இந்த முயற்சி  இதுவரை நாங்கள் செய்திராத புதிய முயற்சி. மிககடினமான காலத்தில் இந்த திரைப்படத்தின் பயணம்
மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. இதில் மிகப்பெரும் சாதனை என்பது இப்படக்குழுவுடன் இணைந்து, இப்படத்தை உருவாக்கியது தான். மின்னல் முரளியை நாம் விரும்பும் சூப்பர் ஹீரோவாக காண்பதற்கு, இப்படக்குழு இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பை தந்துள்ளனர்.

நன்மைக்கும் தீமைக்குமான போரை உங்கள் வீட்டு திரையில் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

Previous Post

விருதுகளை வாரி குவித்த அசுரனுக்கு குவியும் பாராட்டுக்கள்.

Next Post

ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? சூர்யா சொல்லும் சுவாரஸ்ய விளக்கம்

Next Post
ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? சூர்யா சொல்லும் சுவாரஸ்ய விளக்கம்

ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? சூர்யா சொல்லும் சுவாரஸ்ய விளக்கம்

Popular News

  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.