பொதுவாக தமிழ் சினிமாவில் வந்து நிறைய செலவு பண்ணி படம் எடுப்பாங்க ஆனா அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க விளம்பரம் பண்ண மாட்டாங்க .
விளம்பரம் பண்ணா மட்டும்தான் அடித்தட்டு மக்கள் வரைக்கும் போயி ஒரு நல்ல படம் மக்களை போய் சென்றடையும்.
நிறைய பேர் இந்த தவறை பண்ணிட்டு இருக்காங்க ஆனா இதை தான் தயாரித்த முதல் படத்திலிருந்து கெட்டிக்காரத்தனமாக விளம்பரத்துக்கும் படத்தோட பட்ஜெட்டிலிருந்து ஒரு பங்கு செலவு செய்யணும் அப்படின்னு முடிவெடுத்தார் ஒரு தயாரிப்பாளர்.
அவரு வேற யாரும் இல்லைங்க நம்ம கலைப்புலி தாணு அவர்கள் தான் .


அவர் படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் போஸ்டர் பாத்தீங்கன்னா ஒரு ஏரியாவையே கவர் பண்ற அளவுக்கு மிகப் பெரிய சைஸ் போஸ்டரை மாறி ஓட்டுவார் அந்த அளவுக்கு செலவு பண்ண கூடிய ஒரு மிகப்பெரிய தாராள மனது உள்ள ஒரு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள்.
அவர் நிறைய செலவு பண்ணி ஒரு கடைக்கோடி ரசிகன் வரைக்கும் கொண்டு சென்ற படம் தான் “அசுரன் “இதுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு.
அந்த பிரம்மாண்டமான தயாரிப்பாளரை நம்ம தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அவர்களை அசுரன் படத்திற்காக தேசிய விருது பெற்றதற்காக மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் 





