• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களை உற்சாகபடுத்தும் படைப்பாக பிளான் பண்ணி பண்ணனும் படம் இருக்கும் – நடிகர் பால சரவணன் !

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
ரசிகர்களை உற்சாகபடுத்தும் படைப்பாக பிளான் பண்ணி பண்ணனும் படம் இருக்கும் – நடிகர் பால சரவணன் !
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நகைச்சுவை நடிகர் என்றால்,  நகைச்சுவையான வரிகளை எழுதி, வேடிக்கையாக சிரிக்க வைக்க  முயற்சிப்பவர் மட்டுமல்ல, வெவ்வேறு விதமான  சூழ்நிலைகளை கூட, முழுமையாக மாற்றியமைத்து, புன்னகை மலரும்  தருணமாக, அழகுபடுத்தக்கூடிய ஒருவரே சிறந்த நகைச்சுவை நடிகர். நடிகர் பால சரவணன் இந்த திறமையான குணத்தை, தான் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் மிளிர வைத்து,  தான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என நிரூபித்துள்ளார். ஆனாலும் “பிளான் பண்ணி பண்ணனும்”  ஒரு சிறப்பான படைப்பாகவும்,  அவருக்கு மிக நெருக்கமான படைப்பாகவும் உள்ளது,  இது குறித்து கேட்டபோது… “பொதுவாகவே நகைச்சுவை நடிகர்கள் திரைப்படங்களுக்கு மதிப்பை கூட்டி, திரையரங்குகளுக்கு கூட்டத்தை வரவழைப்பதற்காகவே படத்தில் இணைக்கப்படுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதற்கு நேர்மாறாக, காமெடி நடிகர்களுக்கு திரைக்கதையில் தனித்த இடத்தை தந்து, அவர்கள் எழுதியதை மட்டும் செய்யாமல், நகைச்சுவை நடிகர்கள் தரும்  ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஏற்று அதை திரையில் கொண்டு வர அவர்களைத் தூண்டும் சில இயக்குனர்கள் திரைத்துறையில் உள்ளனர். நகைச்சுவை  எப்பொதுமே ஒரு தனி நபர் நிகழ்ச்சியாக இருந்ததில்லை, ஏனெனில் இது ஒரு கூட்டு முயற்சி. பலவற்றை விவாதித்து அனைத்தும் ஒன்றிணைந்தால் தான் அந்த மந்திரம் நிகழும். இயக்குனர் பத்ரி சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் பணிபுரியும் போது அதை தாராளமாக உணர முடிந்தது. உண்மையில், பத்ரி சார் படத்தில் எல்லா இடங்களிலும் சூழ்நிலைகளில் நகைச்சுவைகளை வைத்திருந்தார், அது எனக்கு நல்ல நடிப்பை வழங்க, பெரும் வாய்ப்பாக இருந்தது. ரியோ ராஜ் எனது நெருங்கிய நண்பர், அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. திரையுலகில் மூத்த நடிகராக இருந்தபோதிலும், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நட்பாகவும் ஆதரவாகவும் இருந்தார். ப்ளான் பண்ணி பண்ணனும், ரசிகர்கள் அவர்கள் செலுத்தும் டிக்கெட்டுகளுக்குப் பார்க்கத் தகுந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும்.

“பிளான் பண்ணி பண்ணனும்”  திரைப்படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார் மற்றும் Positive Print Studios LLP சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார்-L சிந்தன்  இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், B ராஜேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் RDX படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படம் டிசம்பர் 30, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

Previous Post

“வேலன்” மனதை வருடும் இனிமையான படைப்பாக இருக்கும் – Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் !

Next Post

மீண்டும் மிகுந்த வலிமையுடன் “மைக்” மோகன்  திரையில்..!

Next Post
மீண்டும் மிகுந்த வலிமையுடன் “மைக்” மோகன்  திரையில்..!

மீண்டும் மிகுந்த வலிமையுடன் "மைக்" மோகன்  திரையில்..!

Popular News

  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.