

நகைச்சுவை நடிகர் என்றால், நகைச்சுவையான வரிகளை எழுதி, வேடிக்கையாக சிரிக்க வைக்க முயற்சிப்பவர் மட்டுமல்ல, வெவ்வேறு விதமான சூழ்நிலைகளை கூட, முழுமையாக மாற்றியமைத்து, புன்னகை மலரும் தருணமாக, அழகுபடுத்தக்கூடிய ஒருவரே சிறந்த நகைச்சுவை நடிகர். நடிகர் பால சரவணன் இந்த திறமையான குணத்தை, தான் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் மிளிர வைத்து, தான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என நிரூபித்துள்ளார். ஆனாலும் “பிளான் பண்ணி பண்ணனும்” ஒரு சிறப்பான படைப்பாகவும், அவருக்கு மிக நெருக்கமான படைப்பாகவும் உள்ளது, இது குறித்து கேட்டபோது… “பொதுவாகவே நகைச்சுவை நடிகர்கள் திரைப்படங்களுக்கு மதிப்பை கூட்டி, திரையரங்குகளுக்கு கூட்டத்தை வரவழைப்பதற்காகவே படத்தில் இணைக்கப்படுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதற்கு நேர்மாறாக, காமெடி நடிகர்களுக்கு திரைக்கதையில் தனித்த இடத்தை தந்து, அவர்கள் எழுதியதை மட்டும் செய்யாமல், நகைச்சுவை நடிகர்கள் தரும் ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஏற்று அதை திரையில் கொண்டு வர அவர்களைத் தூண்டும் சில இயக்குனர்கள் திரைத்துறையில் உள்ளனர். நகைச்சுவை எப்பொதுமே ஒரு தனி நபர் நிகழ்ச்சியாக இருந்ததில்லை, ஏனெனில் இது ஒரு கூட்டு முயற்சி. பலவற்றை விவாதித்து அனைத்தும் ஒன்றிணைந்தால் தான் அந்த மந்திரம் நிகழும். இயக்குனர் பத்ரி சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் பணிபுரியும் போது அதை தாராளமாக உணர முடிந்தது. உண்மையில், பத்ரி சார் படத்தில் எல்லா இடங்களிலும் சூழ்நிலைகளில் நகைச்சுவைகளை வைத்திருந்தார், அது எனக்கு நல்ல நடிப்பை வழங்க, பெரும் வாய்ப்பாக இருந்தது. ரியோ ராஜ் எனது நெருங்கிய நண்பர், அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. திரையுலகில் மூத்த நடிகராக இருந்தபோதிலும், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நட்பாகவும் ஆதரவாகவும் இருந்தார். ப்ளான் பண்ணி பண்ணனும், ரசிகர்கள் அவர்கள் செலுத்தும் டிக்கெட்டுகளுக்குப் பார்க்கத் தகுந்த திரைப்படம் என்பதை நிரூபிக்கும்.


“பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார் மற்றும் Positive Print Studios LLP சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் குமார்-L சிந்தன் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், B ராஜேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் RDX படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படம் டிசம்பர் 30, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.