• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன் – SK 20…

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

by Tamil2daynews
January 2, 2022
in சினிமா செய்திகள்
0
அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன் – SK 20…
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Suresh Productions-Sree Venkateswara Cinemas LLP-Shanthi Talkies வழங்கும், ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ்  அனுதீப் KV இயக்கத்தில்,இசையமைப்பார் தமன் இசையில்,நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில்,  காமெடி திருவிழாவாக,  தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு  “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
As Sivakarthikeyan Celebrates His 36th Birthday, Check 10 Lesser Known  Facts About Him
திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்’  அந்தஸ்தும்,  அதே நேரத்தில் நம் வீட்டு பையன் போன்ற தோற்றமும் அமைவது மிகவும் அரிது. அப்படிப்பட்ட தகுதியுடன் ஒருவர் வரும்போது  உலகளவில் அனைத்து தரப்பினரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தவராக  நடிகர் சிவகார்த்திகேயன்  மிகப்பெரிய வெற்றிப்படங்களை தொடர்ந்து  வழங்கி வருகிறார்.  அவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான “டாக்டர்” உலகளாவிய  வகையில் ரசிகர்களின் மனதை வென்று,  முழு வர்த்தக வட்டத்திற்கும் லாபகரமான படமாகவும் அமைந்து, அவரது நட்சத்திர அந்தஸ்தை  அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. அவரது  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “டான்” ஏற்கனவே வர்த்தக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, வர்த்தக வட்டத்தில் அப்படத்தை,  இப்போதே  அவர்கள் பிளாக்பஸ்டர் என்று உறுதி செய்துவிட்டனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், 2022 புத்தாண்டின் புதுத்துவக்கமாக, தனது புதிய திரைப்படமான  “SK20” குறித்த அறிவிப்பைப் வெளியிட்டுள்ளார்.
Official: Sivakarthikeyan teams up with Anudeep, Thaman! Tamil Movie, Music Reviews and News
நடிகர் சிவகார்த்திகேயன், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னாலு’  படம் மூலம் புகழ் பெற்ற புகழ்  அனுதீப் KV  கூட்டணியில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்டமான ஒரு புதிய படத்தில் இணைகிறார், Suresh Productions சார்பில் திரு.சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ் D.ராமாநாயுடு அவர்களின் மகன்  )நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம்  மோகன் ராவ்  SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும்  Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை வழங்குகின்றனர்.
Sivakarthikeyan Age | Actor Sivakarthikeyan News | Entertainment News
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அனுதீப் ஆகிய இருவருமே  தங்கள் திரைப்படங்களில், அவர்கள் வெளிப்படுத்தும், 100% அதிரடியான காமெடி அம்சங்களுக்காக,  ரசிகர்களிடம்  பிரபலமானவர்கள். இவர்களின் அட்டகாசமான காமெடி திறமை, இப்படத்தை ஒரு  நகைச்சுவை திருவிழாவாக மாற்றும்.  இப்படத்தின் கதை  முழுதும் பாண்டிச்சேரியை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது, முழுக்க முழுக்க  சிறந்ததொரு நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் S.தமன் இசையமைக்கிறார், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் தமன் இணைவது இதுவே முதல் முறை. படம் குறித்து இயக்குனர் அனுதீப் கூறும்போது, “திரைத்துறையில்  உள்ள பெரிய நட்சத்திர  குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில்  மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர்  சிவகார்த்திகேயனை நடிகராக அல்லாமல் ஒரு மேஜிஷியனாகவே தான் பார்க்கிறேன். திரையில் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும், குறிப்பாக குழந்தைகள் முதல் குடும்பங்களில் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரது திறமை, தமிழ்நாட்டை தாண்டி அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்று தந்துள்ளது. இந்த படம் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். இந்த பிரமாண்டமான திரைப்படத்தில், ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்த இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் தமன் அவர்களின் மாயாஜால இசை அனைத்து திரைப்படங்களுக்குமே ஒரு வலுவான தூணாக அமைந்து வருவது குறிப்பிடதக்கது, அவர் இந்த திரைப்படத்தில் பணியாற்றுவதில் நான்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.SK 20 படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
Previous Post

ரௌடி பிக்ச்சர்ஸின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Next Post

நீண்ட நாட்களுக்கு பின் ஐங்கரனின் “நிறங்கள் மூன்று”

Next Post
நீண்ட நாட்களுக்கு பின்  ஐங்கரனின்  “நிறங்கள் மூன்று”

நீண்ட நாட்களுக்கு பின் ஐங்கரனின் “நிறங்கள் மூன்று”

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.