• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பெண் விலை வெறும் 999 மட்டுமே. திரைவிமர்சனம்…

by Tamil2daynews
January 5, 2022
in விமர்சனம்
0
பெண் விலை வெறும் 999 மட்டுமே. திரைவிமர்சனம்…
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பெண் விலை வெறும் 999 மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி உட்பட.! சர்ச்சை  தலைப்பில் நடிக்கும் விஜய் டிவி பிரபலம்.! - Cinemapettai
நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு வழியில் நல்லதாக இருந்தாலும், பல வழிகளில் பலருக்கும் அது ஆபத்தானதாகவும் இருந்து வருகிறது.தற்போது உள்ள காலகட்டத்தில் கைபேசி எனும் கருவியை அனைவரும் கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த கைபேசி மூலம் பல நன்மைகள் நம்மை வந்து சேர்ந்தாலும் சில தீய சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.குறிப்பாக இளம் பெண்களை தவறாக சித்தரித்து அவர்களை மிரட்டி, பணம் பறிக்கும் ஒரு மோசமான கும்பல் சில ஆண்டுகளாக நாட்டில் உலாவிக் கொண்டு இருக்கிறது.பெண்களை குறி வைத்து அவர்களின் கைபேசிக்குள் எப்படியெல்லாம் நுழைகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக தோலுரித்துள்ள திரைப்படம் தான் “பென் விலை 999 மட்டுமே” திரைப்படம்.வரதாஜ் இயக்கத்தில் ராஜ்கமல், மது, ஷ்வேதா பாண்டி மற்றும் பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் “பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே”.
கதைப்படி,
பெண்கள் குறிப்பாக இளைஞிகள் குளிக்கும் போது, தனது ஆண் காதலனுடன் வெளியே சுற்றும் போது, அவர்களுக்கு தெரியாமல் “ஹிட்டன் கேமரா” ஒன்றை பொருத்தி அவர்களின் அந்தரங்கங்களை வீடியோவாக எடுத்து வருகிறது ஒரு கும்பல்.இப்படியாக எடுக்கப்படும் வீடியோவை அந்த பெண்களுக்கே அனுப்பி, மிரட்டி அந்த பெண்களிடம் பணம் பறிக்கிறது அந்த கும்பல்.இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு சில பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த மர்ம கும்பலை வலைவீசி பிடிக்க விரைகிறது தமிழக காவல்துறை.இந்த கும்பலிடம் நாயகி எப்படி சிக்கினார்.? நாயகன் ராஜ்கமல் என்ன செய்தார்.? தமிழக காவல்துறையின் நடவடிக்கை என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதை.
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே” - விமர்சனம் - Tamilveedhi
நாயகன் ராஜ்கமல், சின்னத்திரை நடிகர் என்றாலும் வெள்ளித்திரையில் அவ்வப்போது வந்து ஜொலித்துவிட்டுச் செல்கிறார். மீட்டர் ஏற்றாமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அக்கதாபாத்திரத்தை நேர்த்தியாக்கியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுத்தை தவிர்த்திருக்கலாம்.நாயகி ஸ்வேதா பாண்டி, நடிப்பில் பெரிதான ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அக்கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இன்னும் சற்று கூடுதல் பயிற்சி எடுக்கலாம் நாயகியே.முதல் பாதியில் விறுவிறுப்பை ஏற்றிய இயக்குனர் வரதராஜ், இரண்டாம் பாதியில் சற்று தொய்வை ஏற்படுத்தி விட்டார். விழிப்புணர்வு படமாக எழ ஆரம்பித்த கதை, மெதுவாக நகர நகர காதல் காட்சிகளுக்குள் மூழ்கி போனது.
முதல் பாதியில் கொடுத்த வேகத்தை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால், இக்கால பெண்களுக்கான நல்லதொரு விழிப்புணர்வு படமாக நிச்சயம அமைந்திருக்கும்.விவேக் சக்ரவர்த்தியின், இசை ஓகே ரகம் தான். பாடல்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.சதீஷ்குமார் மற்றும் கார்வ மோகனின் ஒளிப்பதிவு, சரியான வெளிச்சத்தில் சரியான காட்சிகளை மட்டும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.அதிலும், கொடைக்கானலில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்தது.
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – ஆண்ட்ராய்டு கால பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக வர வேண்டிய படம். ஆனால்.???
Previous Post

“பிக்பாஸ்” நிகழ்ச்சியால் வாழ்க்கையை பறி கொடுக்கப் போகும் ஹீரோ…

Next Post

10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா

Next Post
10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா

10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.