• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திரக் கலை விழாமலேசியாவில் நடக்கிறது.

by admin
June 12, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திரக் கலை விழாமலேசியாவில் நடக்கிறது.
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

இதை முன்னிட்டு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பத்திரிக்கையாளர்
சந்திப்பு விஜய் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் அ .ரவிவர்மா பத்திரிகையாளர்களிடம்
பேசும்போது

” எங்கள் சின்னத்திரை நடிகர் சங்கம் மறைந்த நடிகர் எஸ்.என்.வசந்த்
முயற்சியால் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இத்தனை ஆண்டு காலம் சங்கம்
இயங்கிக் கொண்டிருந்தாலும் சங்கத்திற்கான பெரிய நிதியோ சொந்த கட்டடமோ
இல்லாமல் இருந்தது .அந்தக் குறையைப் போக்கும் வகையில் எங்கள் சங்கத்தின்
சார்பில் சின்னத்திரை நடிகர் சங்க நலனுக்காக ஆகஸ்ட் 17 இல் மலேசியாவில்
மாபெரும் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா நடைபெற உள்ளது.

அதாவது 17.8. 2019 சனிக்கிழமையன்று மலேசியாவில் ஷா அலாம் -சிலாங்கர் –
மெலாவாட்டி அரங்கத்தில் இந்த கலை விழா நடைபெற உள்ளது. இந்த கலைவிழாவை
டிவைன் மீடியா நெட்வொர்க் நிறுவனத்தாரின் முன்னெடுப்பில் நடைபெற
உள்ளது.மலேசியாவில் நடந்த எந்த நட்சத்திர கலை விழாவுமே சோடை போனதில்லை
.அதேபோல் இந்த கலை விழாவும் பிரமாண்டமான அளவில் வெற்றிகரமாக
நடைபெறும்.ரசிகர்களின் அபிமானம் பெற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள்
மட்டுமல்ல திரையுலக நட்சத்திரங்களும் கலைத்துறை பிரமுகர்களும் இதில்
பங்கேற்க இருக்கிறார்கள். கண் கவர் மேடையில் சீரிய அரங்குகளுடன் இசையும்
நடனமும்
சிறு நாடகங்களுமாக பிரபல சின்னத்திரை கலைஞர்கள் உங்களை மகிழ்விக்க
வருகிறார்கள்.விழாவில் திரையுலகக் கலைஞர்களும் பங்கேற்பதாக
உறுதியளித்துள்ளார்கள். முதலில் நடிகர் விஜய் சேதுபதி வருவதை உறுதி
செய்துள்ளார். அனைவரின் ஒத்துழைப்போடும் விழா சிறப்பாக
நடைபெறும்.”இவ்வாறு அவர் பேசினார் .

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது

“உண்மையிலேயே சொல்ல வேண்டுமென்றால் எனது ஆதி சங்கம் இந்தச்சங்கம்தான்.
நான் நடிகனாக என் நடிப்பு வெளிப்பட்டது சின்னத்திரையில்தான்.அப்போதிருந்த
ஒரே சேனல் தூர் தர்ஷன்தான்.அதில் 13 எபிசோட் தொடர்களில்
நடித்தேன்.’பனங்காடு ‘என்கிற டெலி பிலிமில் நடித்தேன் .பிறகு கலைஞரின்
‘தென்பாண்டி சிங்கம்’ வரை நடித்திருக்கிறேன் .

எனக்கு கற்றுக்கொடுத்த ஆசான்கள் சொன்னது நடிப்பில் சின்னத்திரை என்றோ
பெரியதிரை என்றோ பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான்.எதில் இருந்தாலும்
நடிப்பு ஒன்றுதான். நான் அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலக நாடக விழாவில்
ஒரு மணிநேர நாடகத்தில் நடித்து வந்தேன் .கார்த்திக் ராஜாவின்
‘பட்டணத்தில் பூதம்’ நாடகத்தில் கூட நான் நடித்தேன். நடிப்பு என்கிற போது
நான் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. இந்த கலை விழாவில் நான் என் சொந்த
செலவில் வந்து பங்கேற்பேன் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்
“என்று கூறி நாசர் வாழ்த்தினார் .

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆடுகளம்
நரேன், உப தலைவர் இயக்குநர் மனோபாலா , வெங்கட் ,நடிகர் சின்னிஜெயந்த்
,சின்னத்திரை நடிகர்கள் தீபக் ,குறிஞ்சி , திரைப்படநடிகர்கள்
ஸ்ரீமன்,சௌந்தர ராஜா , விடியல் சேகர் ஆகியோரும் கலந்து கொண்டு
விழாக்குழுவினரை வாழ்த்தினார்கள். .

மலேசியாவில் இந்தக் கலை விழாவை முன்னின்று அமைத்து நடத்தும்
அமைப்பாளர்களான டத்தோ டாக்டர் சுகுமாரன் ,திருமதி ஷீலா சுகுமாரன் ,டிவைன்
மீடியா நெட்வொர்க்கைச் சேர்ந்த மலேசியா பாலு
,திருச்சிற்றம்பலம்,அம்சராஜ் ஆகியோரும் பேசினார்கள் .

நடிகர் சங்கத்தின் சார்பில் நாசர் தலைமையில் வந்த ஒரு அணியினரும் இன்னொரு
அணியின் சார்பில் ஐசரி கணேஷ் ,குட்டி பத்மினி மற்றும் பலரும் கலந்து
கொண்டு இந்த சின்னத்திரை நட்சத்திரக் கலை விழா குழுவினரின் முயற்சி
வெற்றி பெற வாழ்த்தினார்கள்.

Previous Post

 சிந்துபாத் “ படத்தின் பாடல்களை விநியோகஸ்தர்கள் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

Next Post

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி

Next Post
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி

Popular News

  • ‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

    ‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் ‘டியர் ரதி’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.