• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள  “வெள்ளையானை”

by admin
June 13, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள  “வெள்ளையானை”
0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குனர் சுப்ரமணியம் சிவா 2003 ல்  இயக்குனராக அறிமுகமானார் .நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருடா திருடி சூப்பர் ஹிட் திரைப்படம் . அதனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை ,அசுரன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் .தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனியை வைத்து  இயக்கியுள்ள படம் வெள்ளையானை. 

இந்த வெள்ளையானை திரைப்படத்தை “WHITE LAMP TALKIES ” தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரிக்கிறார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .ஆத்மியா தமிழில் மனங்கொத்தி பறவை எனும் படத்தில் அறிமுகமாகினார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும்  உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

படத்தொகுப்பு – AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் ,  ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த  விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின்  தம்பி  தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

தொழில்நுட்பக்குழு :
எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – S .வினோத்குமார்
கலை இயக்கம் –  ஆ .ஜெகதீசன்
ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி
சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – நாகு
மேக்கப் – A .சரவணகுமார் , B. ராஜா
விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

Previous Post

சின்னத்திரை நடிகர் சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திரக் கலை விழாமலேசியாவில் நடக்கிறது.

Next Post

இராசராசச்சோழன்  வரலாறு  தெரியாமல்  கொக்கரிக்கும்இயக்குநர் பா. ரஞ்சித்; எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி!

Next Post
இராசராசச்சோழன்  வரலாறு  தெரியாமல்  கொக்கரிக்கும்இயக்குநர் பா. ரஞ்சித்; எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி!

இராசராசச்சோழன்  வரலாறு  தெரியாமல்  கொக்கரிக்கும்இயக்குநர் பா. ரஞ்சித்; எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி!

Popular News

  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா தயாரிப்பில் வி ஆர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’

    0 shares
    Share 0 Tweet 0
  • டோரதி’ என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்” -நடிகை கீர்த்தி சுரேஷ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

October 4, 2026
டோரதி’ என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்” -நடிகை கீர்த்தி சுரேஷ்!

டோரதி’ என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்” -நடிகை கீர்த்தி சுரேஷ்!

October 4, 2026

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

October 3, 2026

அன்பில் அவன் – விமர்சனம்

October 3, 2026

சிக்மா – விமர்சனம்

October 3, 2026

Dont Trouble The Trouble – விமர்சனம்

October 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.