• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் ” ரஜினி ” ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்.

by Tamil2daynews
February 27, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி ” சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது…
படத்தின் இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகிறது. திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான  படமாக இதை உருவாக்கி  உள்ளேன். ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை நாயாகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம்.
ரஜினி ரசிகரான விஜய் சத்யா ( ரஜினி ) தனது வாழ்வில் எதிர்பாராத விதமாக  ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்.  அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறது  அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம்.விஜய் சத்யாவிற்கு இந்த படத்திற்கு பிறகு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்த படத்தில் இடம்பெறும் ” துரு துரு கண்கள் ”  பாடலை  சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அந்த பாடல் நிச்சயமாக  மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகமொத்தம் ரஜினி இந்த வருடத்தின் மிக சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும்.என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ்.படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட தயாரிப்பாளர் V.பழனிவேல்  திட்டமிட்டுள்ளார்.
ஒளிப்பதி – மனோ V.நாராயணா
கலை – ஆண்டனி பீட்டர்
நடனம் – செந்தாமரை
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல்
புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணை தயாரிப்பு – கோவை பாலசுப்ரமணியம்.
தயாரிப்பு  – V.பழனிவேல்
திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்
Previous Post

தரமான படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த “Madras Pongal”

Next Post

பரபரப்பாக #சர்தார் படப்பிடிப்பு. நடிகர் கார்த்தி மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

Next Post

பரபரப்பாக #சர்தார் படப்பிடிப்பு. நடிகர் கார்த்தி மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.