
ஒரு வழியா தமிழ் சினிமாவில் இப்போ வரும், அப்போ வரும் நிறைய பேரு சினிமாவே பிடிக்காதுனு சொல்றவங்க கூட இந்த “வலிமை” படம் அவ்வளவு ரீச் ஆயிடுச்சு.ஏன்னா படப்பிடிப்பு இரண்டரை வருடங்கள் தாமதமாக படப்பிடிப்பு நடைபெற்று படம் முழுவதும் முடிந்து தான் காரணம்.அது படக்குழுவினரையும் தப்பு சொல்ல முடியாது “கொரொனா” கொடூரத்தால் உலகமே மாட்டிட்டு இருக்கும்போது பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க.ஒரு வழியா பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்களையும் தமிழ் சினிமாவுல இப்படிப்பட்ட ஒரு டெக்னிசியன்களை யூஸ் பண்ணலாம் அப்படின்னு தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் இயக்குனர் எச்.வினோத்க்கு வாழ்த்துக்கள்.சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் தல ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் வந்து முழுமையான ஒரு சந்தோசத்தை கொடுத்ததுதான் என்று சொல்லணும்.இந்த படத்துல சேசிங் சீன் அவ்வளவு பிரமாதமாக வச்சிருப்பாங்க ரஷ்யாவில் இருந்து வந்த அந்த சேசிங் குழுவினர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

கோர்வையான திரைக்கதையும் அஜித்தோட மேக்கப், பாடி லாங்குவேஜ் ஹேர்கட் முதல்கொண்டு சரியான முன்,பின் தொடக்கம் இல்லாததும் படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் என்று தான் சொல்லணும்.ஒருவழியா பட ரிலீஸ் ஆன அன்றைக்கே ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் தல அஜித்தை பார்க்க போறேம்னு அவங்க ரசிகர்கள் பயங்கரமான ஆர்ப்பாட்டம் பண்ணி பெரிய ரகளை பண்ணி கொண்டாட்டத்தை திருவிழா போல இருந்தது அது நீங்க எல்லாம் ஊர்ல அந்தந்த தியேட்டர் முன்னாடி பார்த்திருப்பீங்க .
தயாரிப்பாளருக்கு ஒரு நல்ல லாபம் .அஜித்குமார் படத்திலேயே இதுவரைக்கும் இல்லாத அளவு கலெக்ஷன் .பாக்ஸ் ஆபீஸில் சொல்றாங்க .இந்த படம் முடியறதுக்கு முன்னாடி அடுத்த படத்திற்கான கால்ஷிட் போனி கபூருக்கே கொடுத்திருக்கிறார் நம்ம தல அஜித்.அந்த படத்தோட இயக்குனர் எச்.வினோத்தான் அப்படிங்கறது நிறைய பேருக்கு தெரியும்.அந்த AK-61 படத்தோட செட் பணிகள் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நம்ம சென்னையில் இருக்கும் மவுண்ட் ரோட்டில் உள்ள ஜெமினி பிரிட்ஜை அப்படியே ஒரு செட் போடறதா கேள்விப்பட்டோம் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை .ஒரு வழியா செட்டு பணிகள் முழுவதும் நிறைவடைந்து அதனுடைய புகைப்படங்கள் வெளியில் வந்தால் மட்டுமே நமக்குத் தெரியும்.

இப்போ அந்த படத்தில் “தல” அஜித்தின் கேட்டப் என்ன..?இப்ப இதுதான் எல்லோருடைய கேள்வியுமே…இந்த படத்தோட கெட்ட பற்றி நம்ம அஜித்குமார் பி.ஆர்.ஓ .திரு .சுரேஷ் சந்திரா அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கெட்டபின் அவுட்லைன் வரைபடத்தை வெளியிட்டு இருந்தார் .அதற்க்கு ஏகப்பட்ட லைக்குள், ஏகப்பட்ட பாராட்டுகளைப், பெற்றது குறிப்பிடத்தக்கது.என்னதான் அவுட்லைனை பார்த்தாலும் தலைய முழுமையாக அந்த கெட்டப்பில் பார்க்கணும்னு இருக்கும் “தல” ரசிகர்களுக்கு இதோ அந்த புகைப்படம்.

ஒரு படம் 25% சூட்டிங் போனதுக்கு அப்புறம் ஒரு ஷெட்யூல் செட்டில் போனதுக்கப்புறம்தான் புகைப்படங்கள் வெளியில் வரும் ஆனா நம்ம தல அஜித் தனது மனைவி, மகள் ,மகன் ,உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் அதுதான் ஏகே 61 நம்ம தல அஜித்தின் அடுத்த படத்திற்கான கெட்டப். “வலிமை” படத்தில் விட்ட நிறை,குறைகளை எச்.வினோத் அவர்களே தலயை வைத்து இயக்கி வரும் AK-61 படத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தல ரசிகர்களின் ஆசையும். பத்திரிகையாளர்கள் ஆகிய எங்களுடைய வேண்டுகோளும் இது ஒன்றே.









