• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பெண் இயக்குனர்..!

by Tamil2daynews
March 19, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பெண் இயக்குனர்..!
எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன. ‘கள்ளன்’ என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இது குறித்து பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ்,
“நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் பெரியார் மண்ணில் சாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மேலும் கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.
ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய அலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார்.அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள்.இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறான்.கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள்.இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாதை” என்று கண் கலங்கினார்.
தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், ” ஒட்டுமொத்த தமிழ் திரையுலக பிரச்சினை இது. என் தனிப்பட்டப் பிரச்சனை அல்ல. எனவே இதை புரிந்து கொண்டு தமிழ் திரைப்படத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்  இந்த வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து இந்த படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு கு ஆவண செய்ய வேண்டும். இந்த திரைப்படத்திற்கு தணிக்கை துறை முறையாக ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அது மட்டுமின்றி இந்த அமைப்புகள் கேட்டபடி வருத்தம் தெரிவித்து கடிதமும் கொடுத்துள்ளோம். இத்தனைக்கும் பிறகும் சில சாதி அமைப்புகள் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விடாமல் மிரட்டுவது அநீதியின் உச்சம்.
இனிமேல் ஒவ்வொரு தயாரிப்பாளரும் சாதி அமைப்புகளின் விதிகளுக்கு உட்பட்டு தான் படம் எடுக்க வேண்டுமென்றால் சென்சார் போர்டு எதற்கு? நாங்கள் எங்களுக்காக மட்டும் பேசவில்லை தமிழ் சினிமா தொடர்ச்சியாக இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறது. தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று இருவரும் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தனர்.
Previous Post

பேட்டரி படத்தில் ஜி. வி பிரகாஷ்குமார் பாடிய பாடல்.

Next Post

“குதிரைவால்” -விமர்சனம்

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

"குதிரைவால்" -விமர்சனம்

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.