“குதிரைவால்” -விமர்சனம்
வித்தியாசமாக இருந்த இந்த படத்தின் ட்ரெய்லர் பலரின் பார்வையால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது.
அறிமுக இயக்குனர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் ஆகியோரின் இயக்கத்தில் குதிரைவால் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
.jpg)
கனவில் நடந்ததை நிஜத்தில் தேடுகிறார். வயதான பாட்டியிடம், கணித ஆசிரியரிடம், ஜோதிடரிடம் என ஒவ்வொருவரின் உதவியைத் தேடி செல்கிறார். “இது எப்படி எனக்கு முளைச்சிருக்கு” என கேள்வி கேட்டுக்கொண்டே விடை தேடுகிறார்.
பதில் தேடிச் செல்லும் அவருக்கு, நிஜ வாழ்க்கையில், அவர் வேலை செய்யும் பணி இடத்தில் சில மாறுதல்களை உணர்கிறார். சரவணனால் சரவணனாக இருக்க முடியவில்லை. வேறொருவராக உணர்கிறார். அதை கனவிலும், நிஜத்திலும் தேடி செல்கிறார்.
சரவணனின் வாயிலாக படம் பார்க்கத் தொடங்கிய நம்க்கு, படத்தின் முதல் அரை மணி நேரம் கடந்த பின்பு படம் நமக்கான ஒரு புதிய அனுபவத்தை தர ஆரம்பிக்கிறது.

டெக்னிக்கலாக படம் அதிகம் பேசப்படும். கலையரசனின் திரை பயணத்தில் இது ஒரு முக்கியமான படம்.

தமிழ் சினிமாவில் குதிரைவால் புதிய முயற்சியாகவும், பல புதிய படைப்புகளின் முன்னோடியாகவும் இருக்கும். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் சென்றடையுமா என்பது சந்தேகமே.
இது படக்குழுவினருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், அவர்கள் பேசி இருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கும் கதைகளும், மனிதர்களும், தியரிகளும் இன்னும் கொஞ்சம் விளங்கும்படி இருந்திருக்கலாம்.
புரிந்து கொள்ள முடியுமா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், ஆனால் நிச்சயம் குதிரைவால் புதிய அனுபவத்தை தரும்.தேடலுக்கு விதைப்போட்டிருக்கும் “குதிரைவால்”, புது முயற்சியில் வெற்றி கண்ட குதிரையாகவே தனி இடத்தைப் பிடித்திருக்கிறது.
வித்யாசமான கதை களம் கண்ட “குதிரை வால்” குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
சரண்