• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் “SK 20” திரைப்படத்தில், உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்!

by Tamil2daynews
March 22, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சிவகார்த்திகேயனின் “SK 20” திரைப்படத்தில், உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் நாயகி குறித்து அற்புதமான தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரும் பலமாக அமையும் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் நம்புகிறார்கள். சர்வதேசத் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்தவர் அவர். இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த பிறகு, தயாரிப்பாளர்கள் மரியா ரியாபோஷப்கா படத்தின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கனவே பங்குகொண்டு நடித்து வருகிறார்.

Official: Sivakarthikeyan begins SK 20 shooting! Tamil Movie, Music Reviews and News
இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’  படம் மூலம் புகழ் பெற்ற  அனுதீப் KV  இயக்குகிறார், நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு, மற்றும் புஸ்கூர் ராம்  மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, அருண் விஷ்வா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையுலகில் இணையும் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய பகுதிகள் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியின் கவர்ச்சிகரமான இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.
இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைப்பது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். தமன் தொடர்ந்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை வழங்கி வருவதால், சிவகார்த்திகேயனுடன் அவரது கூட்டணி ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும்.
Previous Post

பிரமாண்டத்தின் உச்சம் !!! அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது.

Next Post

சூப்பர் ஸ்டாரை தேடும் சுசி கணேசன்..!

Next Post

சூப்பர் ஸ்டாரை தேடும் சுசி கணேசன்..!

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.