• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

தமிழக முதல்வருடன் மலேசிய மனிதவள அமைச்சர் சந்திப்பு..!

by Tamil2daynews
April 1, 2022
in அரசியல்
0
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாணடம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழக முதல்வருடன் மலேசிய மனிதவள அமைச்சர் சந்திப்பு..!

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை மார்ச்-30 அன்று மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சென்னையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமிழக முதல்வருடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்திற்கு வெளியில் உலகிலேயே அதிகம் தமிழர்கள் வசிக்கும் நாடான மலேசியாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வருகை தர வேண்டும் என்று அமைச்சர் சரவணன்  கேட்டுக் கொண்டார்.

உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு மலேசியாவில் தொடர்வதற்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் முதல்வரிடம் உறுதியளித்தார்.

தமிழக முதல்வருடனான சந்திப்பில் தொழிலாளர்கள் தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் எடுத்துரைத்தார்.

மலேசிய சமூக பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஹனிஃபா, மலேசியா பாதுகாப்பு அமைப்பின் செயல்முறை அலுவலர் டத்தோஸ்ரீ  அஸ்மான், மலேசிய மனிதவள அமைச்சின் திறன் மேம்பாட்டு வாரியத் தலைவர் டத்தோ ஷாகுல் ஹமீத் தமிழக ஹிந்து சமயம் மற்றும் அறவாரிய அமைச்சர் சேகர் பாபு  ஆகியோர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகள், மறுசீரமைப்பு வாய்ப்புகள், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சுற்றியுள்ள பிற பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாக மனித வள அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.
Previous Post

டூப் இல்லாமல் நடித்த “காதல் காளை” கார்த்திக்..!

Next Post

Filminati Entertainment காயத்திரி சுரேஷ் வழங்கும் & Whistleman Films Production மற்றும் Sri Guru Jothi Films உடன் இணைந்து வழங்கும், இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

Next Post
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாணடம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !

Filminati Entertainment காயத்திரி சுரேஷ் வழங்கும் & Whistleman Films Production மற்றும் Sri Guru Jothi Films உடன் இணைந்து வழங்கும், இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.