• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராஜமெளலி, ராம்சரண் வெளியிட்ட “ஆதிரா”

by Tamil2daynews
April 1, 2022
in சினிமா செய்திகள்
0
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாணடம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராஜமெளலி, ராம்சரண் வெளியிட்ட “ஆதிரா”
கிரியேட்டிவ்  மேதையாக வலம் வரும் படைப்பாளி பிரசாந்த் வர்மா நட்சத்திர நடிகர்களை  வைத்து படம் எடுக்காமல்,  சூப்பர் கதாநாயகர்களைத் தானே உருவாக்கி வருகிறார். ஜாம்பி கான்செப்ட்டை முதல் முறையாக டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிறகு, பிரசாந்த் வர்மா இந்தியாவின்  முதல் அசல் சூப்பர் ஹீரோ படமான ஹனு-மேன் படத்தை , நடிகர் தேசா சர்ஜா  நடிப்பில் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் மற்றொரு நாயகனை வைத்து இன்னொரு சூப்பர் ஹீரோ படத்தினையும் உருவாக்கவுள்ளார். பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் அதிரா என்ற படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக நாயகன் கல்யாண் தாசரி அறிமுகமாகிறார்.
இந்தியப் புராணக் கதாபாத்திரங்களின் ஈர்ர்பில், பிரசாந்த் வர்மா மார்வெல் மற்றும் டிசி போன்ற சூப்பர் கதாநாயகர்களைப் போன்ற  பிரபஞ்சத்தை, இங்கு இந்தியாவில் உருவாக்குகிறார். பிரசாந்த் வர்மாவுடைய சினிமாடிக் யுனிவர்ஸின் இந்தப் படம் வசனம் மற்றும் கதை சொல்லும் வகையில் தனித்துவமாக இருக்கும். அதிரா பிரசாந்த் வர்மாவின்  மற்றுமொரு  சூப்பர் ஹீரோ படம், இதில் கல்யாண் தலைப்பு பாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இளம் புலி என்டிஆர் மற்றும் மாபெரும் பவர் ஸ்டார் ராம் சரண் ஆகியோர் “அதிரா”  படத்தின் காட்டுத்துணுக்கை வெளியிட்டனர். முதற்கட்ட விளம்பரங்களில் பங்கேற்கும் இந்த மூன்று பிரபல முகங்களின் வாயிலாக அதிரா உடைய காட்சித்திணுக்கு  பெரிய அளவில், அனைவரையும் சென்றடையும்.

நமது  சூப்பர் ஹீரோவின் வலிமையை  வெளிப்படுத்தும் விதமாக காணொளியில் தொடர் வரிசைகளாகப் பல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. சிறுவயதிலிருந்தே மின்சார ஆற்றலை உருவாக்கும் இந்த சிறப்புத் திறனை இந்த சூப்பர்ஹீரோ  பெற்றுள்ளார், மேலும் அவர் வளரும்போது இன்னும்  வலிமையாகவும் வீரமாகவும் மாறுகிறார்.

மற்ற எல்லா சூப்பர் ஹீரோவைப் போலவே, தீமைகளை அழிக்கவும் அப்பாவிகளைப் பாதுகாக்கவும் செய்கிறார். இப்படத்தின் காட்சி துணுக்குகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உள்ளன, மேலும் இறுதி காட்சியில் ஆந்திராவான கல்யாண்  பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்தின் மூலம், மின் ஆற்றலை உருவாக்கும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அவர் ஏந்தியிருக்கும் ஆயுதம் முதுகெலும்பு வடிவத்தில் உள்ளது மற்றும் அது இந்திரனின் சக்தி வாய்ந்த ஆயுதமான வஜ்ராயுதம் போல் தெரிகிறது.

“அதிரா’  படத்தின் காட்சி துணுக்கு அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்துள்ளது, மேலும் இதுவரை திரையில் கண்டிராத  அதிரடி பிரமாண்டத்தை இத்திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம். இப்படத்தின் முதல் காட்டுத்துணுக்கே  பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் செய்துள்ளது.

கல்யாண் தாசரியின் முகம் ஓரளவு மட்டும்  வெளிப்பட்டு, நல்ல கட்டுமஸ்தான உடல், அழகான தோற்றம் மற்றும் உயரத்துடன் இப்பாத்திரத்தில் வெகு பொருத்தமாகத் தெரிகிறார். இளைஞர்களுக்கு இந்த அறிமுகம் ஒரு கனவாக இருக்கும்.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கீழ் அதிக நிதிநிலையில் K நிரஞ்சன ரெட்டி இப்படத்தைத் தயாரிக்கிறார், திருமதி தன்யா வழங்குகிறார். படத்தின் திரைக்கதையை  ஸ்கிரிப்ட்ஸ்வில்லே செய்துள்ளனர்.

இப்படத்திற்கு கௌரி ஹரி இசையமைக்க, தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களின் அருமையான உழைப்பில் காட்சியமைப்பும் பின்னணி இசையும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

பிரசாந்த் வர்மா ஹனு-மேன்  படம் தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்த பிறகு அதிரா படத்தினை  தொடங்குவார்.
நடிகர்கள்: கல்யாண் தாசரி
தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: K நிரஞ்சன ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் வழங்குபவர்கள்: திருமதி தன்யா திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே
ஒளிப்பதிவு : தாசரதி சிவேந்திரா
இசை: கௌரி ஹரி
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி
லைன் தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி இணை தயாரிப்பாளர்: குஷால் ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
ஆடை வடிவமைப்பாளர்: லங்கா சந்தோஷி

 

Previous Post

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது !

Next Post

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Next Post
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாணடம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.