• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

by Tamil2daynews
May 26, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

 

நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (மே 25, 2022) வெளியாக உள்ளது. RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  இணைந்து Romeo Pictures தயாரித்துள்ளது. பிளாக்பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் சில முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை நாளை (மே 25, 2022) வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
படம் குறித்து RJ.பாலாஜி கூறுகையில்..,
Zee Studios & Romeo Pictures நிறுவனங்களுடன்  இணைந்து போனி கபூர் சாரின் BayView Projects போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு ஸ்டுடியோக்கள் தயாரிக்கும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ரசிக்க ஒரு நேர்த்தியான பொழுதுபோக்கிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பப் பார்வையாளர்களுக்காக, ஒரு அருமையான படைப்பாக  இத்திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் இறுதிப்பதிப்பை  பார்த்த தயாரிப்பாளர்கள் அசல் பதிப்பை விட (பதாய் ஹோ)  “வீட்ல விசேஷம்” படம் நன்றாக இருப்பதாக பாராட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாளை நடைபெறும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டியின் போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும். இந்த வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக சத்யராஜ் சார் மற்றும் அபர்ணா பாலமுரளி என்னுடன் மும்பையில் இருக்கிறார்கள். நாளை டிரெய்லரையும் ஜூன் 17, 2022 அன்று முழு நீள திரைப்படத்தையும் உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

தொழில்நுட்பக் குழுவில் கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), RJ.பாலாஜி (வசனம்), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வா RK (எடிட்டிங்), கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் (கதை) திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோ) (விஷிவல் எபெக்ட்ஸ்), நந்தினி கார்க்கி (வசனங்கள்), ராஜராஜன் கோபால் (DI வண்ணக்கலைஞர்) ), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), M செல்வராஜ் (காஸ்ட்யூமர்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), S.பாண்டியன் (முடி அலங்காரம்), N.சக்திவேல் (மேக்கப்), P.செல்வகுமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு).

Romeo Pictures ராகுலுடன் இணைந்து Zee Studios & BayView Projects  தயாரித்த உதயநிதி ஸ்டாலின் நடித்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பை பெறதுடன், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரசிகர்களின் விருப்பமான அவெஞ்சர் மீண்டும் வந்துவிட்டார் !

Next Post

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை ( ஜூன் 22) முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள்

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை ( ஜூன் 22) முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள்

Popular News

  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • “டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.