• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்

by admin
July 18, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறும்படங்கள் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளையும் பெற்று வருகிறது. குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் தற்போது பெரிய படங்களை இயக்கி சாதனை படைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது குலசாமி என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது.
கேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குலசாமி குறும்படத்தை பாக்கியராஜ் இயக்கி உள்ளார். லயோலா கல்லூரி மாணவன் கிஷோத் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நிஜில் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தக் குறும்படம் சமீபத்தில் பிரபலமான யூடியூப் இணையதளத்தில் வெளியானது. சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் இந்த குறும்படத்தை பிரபலங்களும், அரசியல்  தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இக்குறும்படம் குறித்து நடிகர் நகுல் கூறும்போது, ‘குலசாமி என்னும் குறும்படத்தை பார்த்தேன். சமுதாயத்தில் நடக்கிற நிஜமான விஷயத்தை இயக்குனர் பாக்கியராஜ் திறமையாக இயக்கியிருக்கிறார். சாதி என்ற வார்த்தையால் எத்தனை பேர், எப்படி எல்லாம்  பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இக்குறும்படத்தில் பார்க்கலாம்’ என்றார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும், சாதி மதம் விட்டு திருமணம் செய்யும் இளம் தம்பதியரை படுகொலை செய்யும் ஆணவ கொலைகள், வறட்டு கவுரவ கொலைகள் அனைத்து தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்திய அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். சமூகத்தில் நடக்கும் இந்த பிரச்சினையை குல சாமி குறும்படம் மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ். இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்த பாக்கியராஜுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.
Previous Post

நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி

Next Post

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !

Next Post
சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !

Popular News

  • பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு –“ஸ்லம் டாக்” ஒரு ஸ்பெஷல் படம் விரைவில் திரையில் – விஜய் சேதுபதி பாராட்டு! !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures ) தயாரிப்பில் பெரிய அப்டேட் – கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய குடும்ப திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நீ Forever – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ராஷ்டிரபதி பவனில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

April 23, 2026

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures ) தயாரிப்பில் பெரிய அப்டேட் – கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய குடும்ப திரைப்படம்!

April 23, 2026

“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!

April 23, 2026

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

April 23, 2026

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!

April 23, 2026

என்டிஆர் நடிப்பில், ஜூன் 11, 2027 அன்று வெளியாகவுள்ள ‘NTRNeel’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!

April 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.