• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சிவி-2 விமர்சனம்

by Tamil2daynews
July 21, 2022
in விமர்சனம்
0
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சிவி-2  விமர்சனம்  

 

சோசியல் மீடியாவினால் இன்றைக்கு இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் அவரது அவர்களது வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கும் படம்தான் சிவி – 2.

கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கத்தில் கே.சுந்தர் தயாரிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் “சிவி”.திகிலின் உச்சம் தொட்டு சக்கைபோடு போட்ட படம். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து கே.ஆர்.செந்தில் நாதன் இப்படத்தின் தொடர்ச்சியை இயக்கியுள்ளார்.  இப்படத்தில் தேஜ் சரண்ராஜ், சுவாதி, யோகி, தாடி பாலாஜி, சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை.
2007ல் வெளியான “சிவி” படத்தின் தொடர்ச்சி என்பதால். “சிவி” படத்தில் பேய் செய்த கொலையையும் அந்த ஆஸ்பத்திரியிலுள்ள அமானுஷ்யத்தையும் சில காலேஜ் ஸ்டுடண்ட்ஸ், மக்களிடம் யூட்யூப் லைவ் செய்து பணம் ஈட்ட நினைக்கிறார்கள்.அப்போது இவர்களை இயக்கும் தேஜ் சரண்ராஜ் அவர்களுக்கே தெரியாமல் பணத்திற்க்காக மாயாஜால வேலைகள் செய்து வியூஸ்களை அள்ளிவிடுகிறார். அப்போது அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி தான் சிவி முதல் பாகத்தில் வரும் கதாபாத்திரம் “நந்தினி”.தன் சாவுக்கு காரணமானவர்களை முதல் பாகத்திலே பழி வாங்கிய நந்தினி தற்போது வந்திருக்கும் மாணவர்களை என்ன செய்தார். அந்த மாணவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் சுவாரஸ்யமான மீதிக்கதை…

ஒரு படத்தில் ஆங்காங்கே வரும் காமெடி காட்சிகளில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டி வந்த நடிகர் சாம்ஸ் இந்த சிவி- 2 படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும் .மனுஷன் அந்த அளவுக்கு படம் முழுவதும் தனது நடிப்பை நிரப்பி இருக்கிறார்

தேஜ் சரண்ராஜ் தனது பாத்திரத்தின் வலுவை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட்சிக்கு தேவையான உடல் மொழியை கொண்டு நடித்தது கூடுதல் பலம்.இவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி இடம் காத்திருக்கிறது.

கதைக்கு பக்கபலமாய் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். அவர்கள் திகிலடைவது மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து திகிலடைய வைக்கிறார்கள்.கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து சீக்குவல் படம் இயக்க நினைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். கே.ஆர்.செந்தில் நாதனின் கதை தேர்வு சரியான ஒன்று.மேலும், தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் “கோ ப்ரோ” கேமராவை வைத்து மட்டும் இயக்கிவிட்டு. மீதி படத்தை 2007ல் வெளியான சிவி படத்தின் எஃபெக்ட்களை பயன்படுத்தியது சீக்குவல் படத்திற்கு தேவையான ஒன்று என்பதை இயக்குனர் அறிந்துள்ளார்.

பி.எல். சஞ்சயின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் நம்மை மிரட்டியது. அவரின் கேமரா கோணம் அனைத்தும் திகில் படம் என்ற அச்சத்தில் நம்மை வைத்திருக்கும்.மொத்தத்தில் சீக்குவல் படமாக வெளியாகும் பேய் படங்களின் மத்தியில் “சிவி-2” தனித்துவமான ஒரு இடத்தையே பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் திரையரங்கில் பார்ப்பதற்கு சரியான தேர்வு இந்த “சிவி-2”.

குறிப்பு :
சமூக வலைத்தளங்களில் தனக்கு பார்வையாளர்கள் அதிகம் வேண்டும் என்று கண்டதை எடுத்து யூடியூப் எனும் வலைதளங்களில் பதிவிட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த சிவி 2 படம் அல்ல பாடம்.
                        சிவி-2
                     மார்க் – 3.5/5
               
                   விமர்சகர்
                  சரண்
                   (9994667873)
Previous Post

பாட்ஷா கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் 7 நிமிட சிங்கிள் ஷாட் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்

Next Post

ஒரே ஷாட்டில் 6 காமிராவில் பதிவான விஷாலின் எமோஷன் சீன்.

Next Post

ஒரே ஷாட்டில் 6 காமிராவில் பதிவான விஷாலின் எமோஷன் சீன்.

Popular News

  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.