• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வேல்ஸ் பட்டமளிப்பு விழா

by Tamil2daynews
August 6, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வேல்ஸ் பட்டமளிப்பு விழா

 

சென்னை, பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பன்னிரெண்டாம் ஆண்டுப் பட்டமளிப்பு விழா 05.08.2022 அன்று நண்பகல் 12.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் *மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி* அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றிப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.
வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ்
அவர்கள் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ச.ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் வரவேற்புரையாற்றி, 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வழங்கினார்.

இவ்விழாவில், புகழ்பெற்ற நான்கு ஆளுமைகளான  பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் அஜித்குமார் மொஹந்தி, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.சங்கர், இந்திய கிரிக்கெட் வீரர் திரு.சுரேஷ்குமார் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத் தலைவர் திரு.விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு *மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில் 68 தங்கப் பதக்கங்களும் 48 வெள்ளிப் பதக்கங்களும் 43 வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் 4011 இளநிலைப் பட்டங்களும் 583 முதுநிலைப் பட்டங்களும் 87 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும் 148 முனைவர் பட்டங்களும் என மொத்தம் 4829 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக செயல் பட்ட மாணவர்கள் சிலரின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) பேராசிரியர் ஏ.ஜோதிமுருகன், இணைவேந்தர் (கல்வி) முனைவர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் கல்விக்குழுமத் துணைத்தலைவர் செல்வி பிரித்தா கணேஷ், பதிவாளர் பேராசிரியர் பெ.சரவணன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் அ.உதயகுமார், பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி அலுவல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்கள், இளம்பட்டதாரிகள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வு வண்ணமிகு வேல்ஸ் கல்வித் திருவிழாவாக நடந்தேறியது.
Previous Post

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது ; விருது வழங்கும் விழாவில் வசந்தபாலன் வேதனை

Next Post

மங்கை அரிராஜன் இயக்கிய ” ஒழுக்கம் ” குறும்படம்!

Next Post

மங்கை அரிராஜன் இயக்கிய " ஒழுக்கம் " குறும்படம்!

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.