• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வினய் ராய் நடிக்கும் ‘மர்டர் லைவ்’

by Tamil2daynews
September 21, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வினய் ராய் நடிக்கும் ‘மர்டர் லைவ்’

 

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘மர்டர் லைவ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மர்டர் லைவ்’. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மதன் கவனிக்க, கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை டாட் காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
Image
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

” ஹாலிவுட்டில் வெளியான ‘ப்ளைன்ட் டேட்’, ‘ஸ்கை ஹை’, ‘டெர்மினல் எக்ஸ்போசர்’, ‘கிளிட்ச்’, ‘இன் தி கோல்ட் நைட்’ ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான ‘டாட் காம் ஃபார் மர்டர்’ என்ற ஆங்கில படத்தை தழுவி ‘மர்டர் லைவ்’ எனும் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும்.

ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் பரபர திரைக்கதை.

இந்த திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ… இணையதளம் மூலமாகவோ.. ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார். ஆக்சன் காட்சிகளும், பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும்.” என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் வினய் ராய் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் ‘மர்டர் லைவ்’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Previous Post

வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!

Next Post

தனுஷ் நடிப்பில் தெலுங்கு/தமிழில் தயாராகி கொண்டிருக்கும் சார்/ வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு

Next Post

தனுஷ் நடிப்பில் தெலுங்கு/தமிழில் தயாராகி கொண்டிருக்கும் சார்/ வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.