ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!

by Tamil2daynews
September 21, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு  விழா !!!

 

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று    பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இவ்விழாவினில்
எடிட்டர் ஆண்டனி பேசியதாவது …
“ இந்த படத்தை வெற்றியடைய வைத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.

ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது..,
“ இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிந்தது பெருமையாக இருக்கிறது. இது எனது முதல் படம், ஆனால் அதை பற்றிய பதட்டம் எனக்கு வராமல் இருந்ததற்கு தயாரிப்பாளர் ஐசர் கணேஷ், இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி.

நடிகர் நீரஜ் மாதவ் கூறியதாவது..,
“ இது எனது முதல் தமிழ் படம், ஆனால் சென்னையில் தான் எனது படிப்பை முடித்தேன். தமிழ் படம் பண்ண வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. கௌதம் மேனன் சாரின் ரசிகனாக இருந்த எனக்கு, அவருடன் பணிபுரியும் வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக எனக்கு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாடி சிலம்பரசன் அண்ணா ஒரு பேட்டியில் என்னை பாராட்டினார் இன்று அவருடன் நடித்துள்ளது மகிழ்ச்சி. ரகுமான் சார் உடைய இசையில் பாடியது எனக்கு மகிழ்ச்சி. படத்திற்கு நேர்மறையான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.”

தயாரிப்பாளர் Dr ஐசரி K கணேஷ் கூறியதாவது..,
“ படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த திரைப்படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.  நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்த படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வாங்குவார், அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்த படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார். இயக்குனர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றிபடமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏ ஆர் ரகுமான் சார் தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம் 2  விரைவில் தயாராகும்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது..,
“ இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது, அதன் மூலம் நிறைய இடங்களுக்கு படம் சென்றது, அதுபோல எதிர்மறையாக வந்த விமர்சனங்களுக்கும் நன்றி.  ஒரு திரைப்படம் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும், அதற்குள் பல சிக்கல்களும் இருக்கிறது. அதை கடந்து தான்  இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. உங்களால் இந்த படம் பல இடங்களுக்கு சென்றது, அதற்கு உங்களுக்கு நன்றியை கூறிகொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் அவர் கொடுத்தார். நான் ஒரு கதை கொண்டு வரும் போது, அதை என்னை நம்பி எப்பொழுதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி.  சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவிகரமாக இருந்த சிம்புவிற்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் பெரும்பங்காற்றினார், அவருடைய மல்லிபூ பாடல் இப்போது அனைவரும் பாராட்டிகொண்டு இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சி.

நடிகர் சிலம்பரசன் கூறியதாவது..,
என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது இந்தக்கதை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி. இந்தப்படத்தின் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன் அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் நான் பரவாயில்லை. ஆனால் அது அவர்களுக்கு பலருக்கு  வலியை தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு பாகம் 2 ஐ ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு எழுதுங்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி.

Previous Post

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

Next Post

வினய் ராய் நடிக்கும் ‘மர்டர் லைவ்’

Next Post

வினய் ராய் நடிக்கும் 'மர்டர் லைவ்'

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • கெவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ”என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு”

    0 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • தம்பியுடன் மோதும் அண்ணன் உலகமெங்கும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகிறது ” பகாசூரன் “

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!