• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா”

by Tamil2daynews
October 28, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா”

 

கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்கு பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படைப்பிற்கு “மாவீரா”என பெயரிட்டதோடு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். புகழ்பெற்ற “தலைமுறைகள்” நாவலை “மகிழ்ச்சி” என திரைப்படமாகவும்,  “சந்தனக்காடு” வீரப்பனின் வரலாற்றை நெடுந்தொடராகவும்  உண்மைச்சம்பவங்களை மட்டுமே மையப்படுத்தி படைப்புகள் செய்த  வ.கௌதமன் “மாவீரா”வில் முதன் முதலாக மண்ணையும், பெண்ணையும் மானத்தையும் காத்து வாழ்ந்த ஒரு முந்திரிக்கட்டு  மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாக்குகிறார் .

“எதிரியை கொல்லணும்   என்று நினைப்பதை  விட அவன் மனதை வெல்லணும்” என்கிற இலக்கோடு இப்படைப்பிருக்கும் என நம்பிக்கை தரும் இயக்குனர் அதே நேரத்தில் கேட்பார் எவருமில்லை என்கிற தீய எண்ணத்தோடு எவர் வரினும் “அத்து மீறினால் யுத்தம்” என்கிற பிரகடனத்தையும் “மாவீரா” பேசும் என்கிறார்.

பரபரப்பான சம்பவங்களோடு ஆக்ஷன் கலந்து  அதிரடியாக உருவாகும் மாவீராவிற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, சண்டை பயிற்சி ‘ஸ்டண்ட்’ சில்வா, நடனம் தினேஷ், மக்கள் தொடர்பு நிகில் முருகன்  என முன்னணி தொழிநுட்பக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

வி.கே புரடக்ஷன் குழுமம்  முதன் முறையாக தயாரிக்கும் இப்படைப்பில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Previous Post

நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்

Next Post

தளபதி விஜயை பின் தொடரும் 40 லட்சம் பார்வையாளர்கள்

Next Post

தளபதி விஜயை பின் தொடரும் 40 லட்சம் பார்வையாளர்கள்

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.