• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய சினிமாவில் பார்க்காத அதிசயத்தை ‘பாம்பாட்டம்’ படத்தில் பார்க்கலாம்..!

by Tamil2daynews
November 28, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய சினிமாவில் பார்க்காத அதிசயத்தை ‘பாம்பாட்டம்’ படத்தில் பார்க்கலாம்..!

 

 “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது.

“கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு  சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். ‘திருட்டு பயலே’,  ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக கலக்குகிறார்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ’பாம்பாட்டம்’ ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம், இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத ஆச்சரியம். படத்தில் இன்னும் என்ன சுவாரஷ்யங்கள்? என்று இயக்குனர் வி.சி.வடிவுடையானிடம் கேட்டோம்.
“பொதுவா எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான்  ‘பாம்பாட்டம்’. அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள்தான் படத்தின் கதை, கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை டிராவல் ஆகும். இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் சூழ்நிலை என நிறைய மெனக்கெடல் இருந்தது.
மும்பையில் பலகோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். குடும்பமாக வந்து ரசிக்கும் அளவுக்கு படத்தில் சுடச்சுட சுவாரஷ்யங்கள் இருக்கும். போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர,சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.”என்ற இயக்குனர் படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா பார்த்துவிட்டு பாராட்டியதாக சொன்னார்.
‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர்  நடிகர் ஆர்யா வெளியிட்டார்.இப்படத்தில் மேலும் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை  – C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா,மக்கள் தொடர்பு – மணவை புவன்,
இணை தயாரிப்பு  – பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு  – V.பழனிவேல்.
Previous Post

25 நவம்பர் 2022 முதல் ஜீ5 இல் ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ பார்க்க தயாராகுங்கள்!

Next Post

வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Next Post

வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Popular News

  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்தி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.