• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம் !!!

by Tamil2daynews
February 10, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம் !!!

 

வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் டிவோ இசை நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற நான்கு தென்னிந்திய மொழி இசை சந்தைகளிலும் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தும்.
இந்திய பொழுதுபோக்குத் துறையில் முன்னணியில் இருப்பதற்கு வார்னர் மியூசிக் இந்தியாவிற்கு இந்த முதலீடு உத்தி பெரிதும் உதவும்.
வார்னர் மியூசிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜெய் மேத்தா கூறுகையில், “வார்னர் மியூசிக் இந்தியா”  பேனரின் கீழ் டிவோ பிராண்டைக் கொண்டு வர முடிந்ததில் நாங்கள்  மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நடவடிக்கை நாட்டின் தென்னிந்திய  பகுதியில் எங்கள் நிறுவனத்தை வலுப்படுத்தும். இந்தியாவில் எங்கள் நிறுவனம் மிகப்பெரும் வளர்ச்சியடைய, டிவோவின் விரிவான போர்ட்ஃபோலியோ உதவும். தென்னிந்தியாவில் எங்களின் இசையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் கலைஞர்களுக்கான அடையாளமும், இசை சூழலும்  மிகப்பெரும் அளவில் மேம்படுத்தப்படும்”.
வார்னர் ரெக்கார்ட் மியூசிக், தலைவர் அல்போன்சோ பெரஸ் சொடோ ( Alphonso Perez Soto ) கூறுகையில், “டிவோ”  நிறுவனத்தை எங்களுடன் இணைத்தது எங்களது இந்திய  இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். 2020 ஆம் ஆண்டில் வணிகத்திற்காக இதை நாங்கள் ஆரம்பித்தோம், மேலும் தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் மற்றும் கலாச்சார ரீதியாக தொடர்புடைய கலைஞர்களின் படைப்புகள்  மூலம் சந்தையில் ஒரு முக்கிய போட்டியாளராக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். நான்கு மாநில இசைச் சந்தைகளில்  செயல்படும் ஒரு அற்புதமான நிறுவனத்தை உருவாக்கிய டிவோவில் உள்ள ஷாஹிர் மற்றும் விசு மற்றும் குழுவுடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து, தென்னிந்திய இசையை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வோம்”.
டிவோவின் நிறுவனரும் இயக்குநருமான ஷாஹிர் முனீர் கூறுகையில்,
“வார்னர் மியூசிக் இந்தியாவுடன் இணைவது எங்களுக்கு மிகப்பெரும் பெருமை. உலகளாவிய மிகப்பெரும் நிறுவனத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பை பெற்றுத்தரும்.  வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய  மிகச்சிறந்த  அம்சமாக இது இருக்கும். வார்னர் மியூசிக்கின் உலகளாவிய மதிப்பின் மூலம் எங்கள் இசை வணிகம் இன்னும் விரிவடையும், மேலும் இது எங்கள் கலைஞர்கள் மற்றும் லேபிள் நிறுவனங்களின்  வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
டிவோ இயக்குனர் விசு ராமசாமி கூறியதாவது..,
“எங்கள் நிறுவனத்தின் அடுத்த கட்டமாக வார்னர் மியூசிக் இந்தியாவுடன் இணைவதில்  பெருமை கொள்கிறோம். இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும்  எங்களின் செயல் சித்தாந்தங்களின் மீதான நீண்ட கால அணுகுமுறையை கடைப்பிடித்ததில்  இந்த இணைப்பு மிக சரியானதாக அமைந்துள்ளது. மேலும் இந்த இணைப்பால் எங்கள் நிறுவனம்  தென்னிந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக மாறும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று உறுதியாக கூறுகிறார்.
Previous Post

ரன் பேபி ரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸுடன் புதிய படத்திற்காக இணைந்த ஜியென் கிருஷ்ணகுமார்

Next Post

‘டாடா’ – விமர்சனம்

Next Post

‘டாடா’ - விமர்சனம்

Popular News

  • நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • தி அக்காலி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.