ரன் பேபி ரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸுடன் புதிய படத்திற்காக இணைந்த ஜியென் கிருஷ்ணகுமார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த பிப்-3ஆம் தேதி வெளியான ரன் பேபி ரன் படம் பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்த படம் விறுவிறுப்பான கதை, த்ரில் மற்றும் எதிர்பாரா திருப்பங்களுடன் ஒரு முக்கியமான செய்தியையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

இயக்குனர்கள் மனு ஆனந்த், ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் இயக்கும் படங்கள் உட்பட மற்றும் சில படங்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன. எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை தருவதில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய உறுதியை தெரிவிக்கிறது.