• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

விடுதலை பாகம்1- விமர்சனம்

by Tamil2daynews
April 1, 2023
in விமர்சனம்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விடுதலை பாகம்1- விமர்சனம்

 

1987 காலகட்டம்! ஒரு மலைக் கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு முடிவெடுக்கிறது. அதனால் மலைவளமும் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கத்திற்கு எதிராக திரும்புகிறது மக்கள் படை ஒன்று. அந்த மக்கள் படையின் தலைவர் விஜய்சேதுபதியைப் பிடிக்க காவல்துறை பெரும் சிரத்தை எடுக்கிறது. அந்தக் காவல்துறை டீமில் சாதாரண டிரைவர் போலீஸாக இருக்கிறார் சூரி. விஜய்சேதுபதியின் மக்கள் படைக்கு தொடர்பு கொண்டுள்ள ஒரு பெண்ணோடு காதல் வயப்படுகிறார் சூரி. ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதியை பிடித்து வர வேண்டிய அகநெருக்கடி சூரிக்கு ஏற்பட சூரி விஜய்சேதுபதியை பிடித்தாரா.. அடுத்தடுத்து என்ன நிகழ்ந்தது என்பது திரைக்கதையாக விரிகிறது

கதையின் நாயகனாக சூரி அதகளப்படுத்தி இருக்கிறார். வெள்ளந்தித் தனமாக இருந்தாலும் தவறு செய்யவில்லை அதனால் உயரதிகாதியிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்ற உறுதியில் கலக்கியுள்ளார். அவருக்கும் பவானிக்குமான காதல் காட்சிகளில் சூரியின் பாடிலாங்வேஜ் அல்டிமேட் ரகம். வாத்தியாராக வரும் விஜய்சேதுபதி சற்று நேரமே வந்தாலும் அதை கெத்து நேரமாக மாற்றுகிறார். ஒரு போராளியாக வரும் அவரின் கேரக்டர் வடிவம் படு ஸ்ட்ராங்காக எழுதப்பட்டுள்ளது. OC-ஆக வரும் சேத்தன், DSP ஆக வரும் கெளதம் வாசுதேவ் மெனென் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் அசத்தல் ரகம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நடிகை பவானியின் நடிப்பை. Every ப்ரைம்களிலும் அவர் கண்கள் நம்மை கட்டிப்போடுகிறது. சிறுசிறு வசனங்களால் கூட நம்மை கலங்கடிக்கிறார்Ananda Vikatan - 07 September 2022 - “கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - 'விடுதலை' ரகசியம் சொல்லும் வெற்றிமாறன் | vetrimaran interview about Viduthalai movie - Vikatan

வெற்றிமாறனின் திரைமொழி இந்தமுறையும் நம்மை ஏமாற்றவில்லை. ஒரு காட்சியின் ஓப்பனிங்-end துவங்கி, ஒவ்வொரு கேரக்டர்களின் தனித்துவம் வரைக்கும் பெரும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார். வெற்றிமாறனும் மணிமாறனும் எழுதியிருக்கும் வசனங்கள் படத்தின் மற்றுமொரு பில்லர்.Viduthalai Part 1' movie review: Soori shines in Vetri Maaran's most politically-charged film yet - The Hindu

அரசின் செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அதிகாரிகள் அரசு சொன்னதைச் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதை இயல்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். மேலும் காவல்துறைக்கு தண்டிப்பதில் இதுதான் எல்லை என்ற எந்த வரையறைகளும் இல்லை என்பதை அம்மணப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளார் வெற்றிமாறன். சோளகர் தொட்டி நாவலில் வருவதைப் போல உடலில் துணியில்லாமல் பெண்கள் படும் அவஸ்தைகளை திரையில் காட்டி நம்மை விம்மச் செய்கிறார். இத்தனை அடிகள் வாங்கியும் அவமானங்கள் தாங்கியும் அம்மக்கள் மீண்டும் மீண்டெழத்தான் போகிறார்கள் என்பதற்கான லீட்-ஐ கொடுத்து இந்தப்பாகத்தை நிறைவு செய்துள்ளது விடுதலை. இந்த விடுதலை மக்கள் அனைவருக்குமானது.

Previous Post

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

Next Post

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

Next Post

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

Popular News

  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.