• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ஆகஸ்ட் 30 ம் தேதி வெளியாகிறது “மயூரன்“!

by admin
August 26, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ஆகஸ்ட் 30 ம் தேதி வெளியாகிறது “மயூரன்“!
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் )

படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது…

சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.

நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்

படம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை

தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.

வேலாராமமூர்த்தி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை சுற்றிதான் கதை நகர்கிறது. தயாரிப்பாளர் H.முரளி படத்தை தமிழகமெங்கும் ஆகஸ்ட் 30 ம் தேதி வெளியிடுகிறார்.

Previous Post

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  ‘சிச்சோரே’ !

Next Post

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி!

Next Post
நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி!

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை அசத்தியுள்ளது டிஸ்னி + ஹாஸ்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.