• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

யானை முகத்தான்- விமர்சனம்

by Tamil2daynews
April 24, 2023
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யானை முகத்தான்- விமர்சனம்

 

ஆட்டோ ஓட்டுநரும் தீவிர விநாயகப் பக்தருமான கணேசன் (ரமேஷ் திலக்), வாடகைக் கொடுக்க முடியாமலும் கடன் நெருக்கடியாலும் திண்டாடுகிறார். ஏமாற்று வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார். அவர் வீட்டின் உரிமையாளர் மல்லிகா (ஊர்வசி), கணேசனிடம் கண்டிப்பு காட்டினாலும் பல வழிகளில் அவருக்கு உதவுகிறார். இந்நிலையில் விநாயகர் உருவம் எங்கு, எந்த வடிவத்தில் இருந்தாலும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. திடீரென்று ஒரு நாள் கணேசன் முன் தோன்றும் ஒருவர், (யோகி பாபு) ‘நான் தான்’ விநாயகர் என்கிறார். கணேசன் நல்லவனாக, நேர்மையாக ஒருநாள் வாழ்ந்தால், தன் உருவத்தைக் காண்பிப்பதாக உறுதி அளிக்கிறார். இந்த நிகழ்வு கணேசன் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது மீதிக் கதை.

மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, ‘மனிதனின் உள்ளம்தான் கோயில், அதற்குள்தான் கடவுள் வசிக்கிறார், நல்லவராக வாழ்வதன் மூலம் மட்டுமே கடவுளை உணர முடியும்’ என்னும் செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். இதற்கு கடவுள் உருவம் தெரியாமல் போவது, கடவுள், மனித உருவத்தில் வருவது போன்ற விஷயங்களை நகைச்சுவையுடன் சேர்த்து கலகலப்புடன் சொல்ல நினைத்திருக்கிறார்.யானை முகத்தான்: திரை விமர்சனம் | yaanai mughaththaan film review yogi babu - hindutamil.in

ஆனால் படம் தொடங்கி, மையப் பகுதிக்கு வருவதற்கே நீண்ட நேரம் ஆகிறது. கணேசனின் வாழ்க்கைச் சூழல் விரிவாகச் சொல்லப்பட்டாலும் அவர் ஏமாற்றிப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? என்பது போன்ற விஷயங்கள் சரியாகச் சொல்லப்படாததால் கணேசனின் உணர்வுகளுடன் ஒன்ற முடியவில்லை. நகைச்சுவை முயற்சிகளும் சிரிக்க வைக்கவில்லை. முதல் பாதியின் பிற்பகுதியில் விநாயகர் உருவம் கணேசன் கண்ணுக்குத் தெரியாமல் போவதால் அவர் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களும் விநாயகர் மனித ரூபத்தில் வந்ததும் நிகழும் உரையாடல்களும் ரசிக்க வைக்கின்றன. படத்தின் இரண்டாம் பாதியில் கடவுள், நன்மை, தீமை, மனிதநேயம் ஆகியவை தொடர்பான உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

கணேசனுக்கு விநாயகரின் உண்மையான உருவம் உணர்த்தப்படும் இறுதிக் காட்சி சிறப்பாக உள்ளது. இதேபோல் உணர்வுபூர்வமான தாக்கம் செலுத்தும் காட்சிகள் கூடுதலாக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Yogi Babu said that we should start our next film soon after watching Yaanai Mugathaan,” Director opens up! - News - IndiaGlitz.comமுதன்மைக் கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் சிறப்பாகநடித்திருக்கிறார். ஊர்வசி வழக்கம்போல் மனதில் நிற்கும் நடிப்பைத் தந்திருக்கிறார். நண்பனாகக் கருணாகரன், கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். யோகிபாபு கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, கடவுள் தன்மைக்குத் தேவையான மந்தகாசப் புன்னகையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பரத் சங்கரின் பின்னணி இசைகாட்சிகளுக்கு வலுகூட்டுகிறது. கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவு படத்தின் அமானுஷ்ய உள்ளடக்கத்தைப் பார்வையாளர்களுக்குச் சரியாகக் கடத்துகிறது.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘யானை முகத்தான்’ கொண்டுவந்திருக்கும் மேன்மையான செய்தி அனைவரையும் சென்றடைந்திருக்கும்.

Previous Post

‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்

Next Post

தமிழரசன் – விமர்சனம்

Next Post

தமிழரசன் - விமர்சனம்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.