• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பல அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட’சமூக விரோதி’ டைட்டில் லுக் !

by Tamil2daynews
May 1, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பல அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்கள் 30 பேர் இணைந்து வெளியிட்ட’சமூக விரோதி’ டைட்டில் லுக் !

 

தொல். திருமாவளவன்,தோழர் க. பாலகிருஷ்ணன்,வன்னி அரசு,விஜய் சேதுபதி, சசிகுமார் , சமுத்திரகனி, நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, இயக்குனர் ராஜீ முருகன்,வாணி போஜன் சினேகன், கலையரசன், போஸ் வெங்கட் என 30 பேர் வெளியிட்ட ‘சமூக விரோதி ‘டைட்டில் லுக்!
தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக  ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 30 பேர் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இத் திரைப்படத்தை
இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தனது முதல் படமாக ‘பொது நலன் கருதி’ படத்தினை கந்து வட்டி கலாசாரத்திற்கு எதிராக எடுத்து பாராட்டப்பட்டவர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு- ஜிஜூ மோன் P.S., இசை- மலாக்கி , கலை -முஜிபுர் ரஹ்மான், எடிட்டிங் – மீனாட்சி சுந்தர், ஸ்டண்ட் – பிரபு, என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகியுள்ளது.நிர்வாகத் தயாரிப்புப் பொறுப்பை எஸ். வினு ஏற்றுள்ளார். T. அருள்மணி சீயோன் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த ‘சமூக விரோதி’ திரைப்படத்தில் பிரஜின் ,நாஞ்சில் சம்பத் ,கஞ்சா கருப்பு ,வனிதா விஜயகுமார்,தயாரிப்பாளர் கே.ராஜன் ,வழக்கு எண் முத்துராம் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட் ,கலையரசன்,இயக்குநர் மோகன் ஜி , அரசியல் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன்,நாஞ்சில் சம்பத்,திண்டுக்கல் லியோனி போன்று
பல்வேறு ஆளுமைகள் 30 பேர் இந்தப் படத்தின் டைட்டில் லுக்கைத் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
‘சமூக விரோதி ‘  டைட்டில் லுக், வெளியான நிமிடத்தில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் சீயோன் ராஜா பேசுகையில்
”ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியால் சீயோனா ஃபிலிம் ஃபேக்டரி என்கிற நிறுவனம் உருவாகி உள்ளது.இந்நிறுவனத்தின் சார்பில், எனது இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படமாக ‘சமூக விரோதி ‘படம் உருவாகி உள்ளது.
 சில சமூக விரோதிகள் அரசியல்வாதிகளையும் ,அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சமூகத்தில் பல நாசகரமான வேலைகளில் புத்திசாலிதனமாக ஈடுபட இந்தச் சமுதாயத்தில் பணத் தேவையுடன் வேலையின்றி ,பொருளாதார வறுமை  கொண்ட இளைஞர்களைத் தேடிப் பிடித்து எப்படி அவர்களைத் தொழில்நுட்பத்திற்குப் பழக்கி சமூக விரோத செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுத்துகிறார்கள்
என்பதை ‘சமூகவிரோதி’ திரைப்படத்தின் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளேன்.
“புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம் “என்கிற சிந்தனை முழக்கத்தோடு இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளோம்.
அறமே இல்லாத மனிதர்களிடம் இந்தச் சமூகம் கருணையை எதிர்பார்க்கிறது,மூலை சளவை செய்பவனிடம் முன்னேற வழி கேட்கிறது இதுதான் இந்த தலைமுறை முரண்.கருத்தியல் ரீதியாக நான் வைத்திருக்கும் விவாதத்திற்கு சமூகம் செவி சாய்க்கும் என்றே நம்புகிறோம்.
இப்படத்தில் நல்லவன் ,கெட்டவன் என்ற எல்லையை வாழ்க்கை சம்பவங்களால் கடந்த ஒரு வைராக்கியம் மிகுந்த இளைஞனாக பிரஜின் நடித்துள்ளார். தனது தோற்றம், உடல் மொழி, பேச்சு என அனைத்தையும் மாற்றிக்கொண்டு ஒரு வீரியமுள்ள பாத்திரமாக வாழ்ந்துள்ளார் ,படத்தில் நடித்துள்ள அனைவருமே அந்தந்த, பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை எப்படி தன் வயப் படுத்திக் கொண்டு உரிய முன் தயாரிப்புடன் நடிக்க வேண்டும்  என்று விவாதித்து ,கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து கொடுத்திறார்கள்,கண்டிப்பாக இந்த அர்ப்பனிப்புள்ள உழைப்பு படம் பார்ப்பவரை ஆச்சரியப்பட வைக்கும் ,அந்த அளவிற்கு அனைவரும் நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.
எங்கள் படக்குழுவின் இந்தப் படைப்பைத் திரையுலக பிரமுகர்களும் ,அரசியல் ஆளுமைகளும், ஊடக நண்பர்களும் வெளியிட்டுப் பாராட்டி இருப்பது  எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது. அவர்களுக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் எங்கள் உணர்வுகளைச் சொல்லி விட முடியாது. பொருப்புமிக்க கலைஞனாக இருப்பதே அனைவருக்கும் நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என நம்புகிறேன் என்று படத்தின் தயாரிப்பாளரும் ,இயக்குனருமான சீயோன் ராஜா தெரிவித்தார்
படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது .
Previous Post

2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்: சரத்குமார் பரபரப்பு பேட்டி

Next Post

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X

Next Post

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

August 20, 2026

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.