• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்…

by Tamil2daynews
May 5, 2023
in செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்…

 

இன்று சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற ‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால் அவர்கள், சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலா அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களும் விஷாலுடன் மௌன அஞ்சலியில் பங்கேற்றனர்.
அதன்பிறகு பேசிய விஷால், “விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.
சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரும் வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். விவசாயி
‘சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!’ என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன்.
கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ மாணவ, மாணவியர்களுக்காகத்தான். அந்த வகையில்  சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தின் வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தேவி அறக்கட்டளை மூலம் பல மாணவ, மாணவியர்களை படிக்க வைத்து வருகிறேன். அதற்குத் துணையாக எங்களுடைய தேவி அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இது  போன்று எண்ணற்ற மாணவ, மாணவியர்ளை மரிய ஜீனா படிக்க வைத்துவருகிறார் .
நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் நீங்களும் உதவலாம் இங்கு கலந்துகொண்டுள்ள அனைவரும் உங்களால் முடித்தால் ஒரு ரூபாய் கொடுக்க விரும்பினால் உங்களால் ஒரு விவசாயி குடும்பத்துக்கோ அல்லது ஒரு மாணவ, மாணவி படிப்பதற்காகவோ உதவ முடியும். போற்றுவோம் விவசாயத்தை, காப்போம் விவசாயியை..!! இது போன்ற விவசாயம் போற்றும் நிழச்சிகள் அனைத்து மாவட்டங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்” எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார் நடிகர் விஷால்.
Previous Post

விரூபாக்‌ஷா – விமர்சனம்

Next Post

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & ‘பத்து தல’ புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்

Next Post

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & 'பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்

Popular News

  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • “பூக்கி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.