• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தலைநகரம்-2 விமர்சனம்

by Tamil2daynews
June 24, 2023
in விமர்சனம்
0
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தலைநகரம்-2 விமர்சனம்

ஏற்கனவே சுந்தர் சி தலைநகரம் 2 அதை மனதில் வைத்து ‘நகரம்’ என்கிற படத்தை தயாரித்தார் சுந்தர்.சி. அந்த படம் மக்கள் மத்தியில் சரியா வரவேற்பு பெறல .ஆனா இயக்குனர் v.z.துரை திரும்பவும் தலைநகரம் 2 என்கிற பெயரிலேயே ஒரு படம் எடுத்திருக்கிறார் படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் என பலரும் நடித்துள்ள ‘தலைநகரம் 2’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ளார்.

தலைநகரம்’ படத்தில் ரைட் என்னும் கேரக்டரில் மிகப்பெரிய ரவுடியாக வரும் சுந்தர்.சி தன்னுடைய நண்பனின் (போஸ் வெங்கட்) மரணத்திற்கு பிறகு திருந்தி வாழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள 2ஆம் பாகத்தில் திருந்தி வாழும் சுந்தர்.சி தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பணிகளை மேற்கொள்கிறார். மறுபக்கம் வடசென்னை (ஜெய்ஸ் ஜோஸ்), மத்திய சென்னை (விஷால் ராஜன்), தென் சென்னை (பிரபாகர்) பகுதிகளை ஆட்டிப்படைக்கும் ரவுடிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவுகிறது.
Thalainagaram 2 official trailer sundar c palak lalwani ghibran dhorai vz
இதில் மத்திய சென்னை ரவுடி விஷால் ராஜன் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகை பாலக் லால்வானி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அவரை கடத்தியது தொடர்பாக விஷால் ராஜனும், தம்பி ராமையாவுடனான பிரச்சினையில் ஜெய்ஸ் ஜோஸூம்,  யதேச்சையாக ஒரு பிரச்சினையில் பிரபாகரும் சீண்டிப் பார்க்க சுந்தர்.சி மீண்டும் ‘ரவுடி ரைட்’ ஆக மாறுகிறார். இதன்பின்னர் இவர்கள் 4 பேரின் நிலைமை என்ன ஆனது? .. தலைநகரத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்.
Thalainagaram 2: Here's when Sundar C's gangster drama will be released in theatres
படத்தில் நடித்துள்ளவர்களில் சுந்தர்.சி தவிர்த்து அத்தனை பேரும் தங்களுடைய கேரக்டர்களை குறைவில்லாமல் செய்துள்ளனர் என்று சொல்லலாம். ஆனால் யாரும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் சுந்தர்.சி மிரட்டுகிறார். ரிட்டையர்ட் ரவுடியின் கேரக்டரை அசால்டாக செய்து பாராட்டைப் பெறுகிறார்.

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்த மூன்று பெண்கள் அவர்களைப் பார்த்தாலே படம் பார்ப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்குவது நிஜம் .

அதிலும் நடன இயக்குனர் விஜி அவர்கள் கண்ணில் வரும் அந்த ஆக்ரோஷமும் அந்த கோவமும் பழித்தீர்க்க காத்திருக்கும் வஞ்சமும் எப்பப்பா நடன இயக்குனர் விஜி அவர்களே உங்களுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் காத்திருக்கிறது வாருங்கள்.

தமிழ் சினிமாவிற்கு நிரந்தர பெண் வில்லி கிடைத்துவிட்டார்.

முகவரி மூலம் வந்த துரை தொட்டி ஜெயா படத்தின் மூலம் தன்னால் ஆக்‌ஷன் படமும் இயக்க முடியும் என நிரூபித்த வி.இசட்.துரைக்கு இந்த படம் என்ன சொல்லவா வேண்டும். பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜை கொடுத்துள்ளார். காட்சிகளில் இருக்கும் மெனக்கெடல்கள் திரைக்கதையில் ஆங்காங்கே இல்லாமல் போவது மைனஸாக உள்ளது. குறிப்பாக சுந்தர்.சியை பழிவாங்க நினைக்கும் காட்சிகள் பெரும்பாலும் வசனங்களோடு கடந்து போகிறது. ஆக்‌ஷன் படங்கள் என்றால் ரசிகர்களை அப்படியே ஒன்ற வைக்க வேண்டும். படத்தில் அத்தனை கொலை நடக்கிறது. போலீஸ் எங்கேயுமே வரவில்லை.

முதல் பாகத்தில் எப்படி ரவுடிகளை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் போலீஸ், திருந்த நினைப்பவனை தடுக்கும் போலீஸ் என இருவேறு கேரக்டர்கள் காட்டப்பட்டிருக்கும். ஆனால் இதில் அப்படியான காட்சிகளே இல்லை. அதேபோல் பழிவாங்கும் காட்சிகளை அப்படியே கொடூரமாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உதவியுள்ளது.

கதாநாயகி ஒரு நடிகையாக வருவதால் அவ்வளவு ஆபாசம் கலந்த கிளாமர் தேவையா என்று சிந்திக்க வைக்கிறது.

ஆனாலும் முதல் பாகத்தை விட பெட்டராக இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என சொதப்புபவர்கள் மத்தியில் தலைநகரம் 2 தப்பியுள்ளது என சொல்லலாம்.

மொத்தத்தில் இந்த தலைநகரம் -2 பெரும் நகரம்…

Previous Post

திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகும் “நேற்று நான்.. இன்று நீ”

Next Post

‘பாயும் ஒளி நீ எனக்கு’ விமர்சனம்

Next Post

'பாயும் ஒளி நீ எனக்கு' விமர்சனம்

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணையும் #DNS படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • “கலைப்புலி”தாணு வின் 50 ஆம் ஆண்டு..!

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

July 15, 2026

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

July 15, 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

July 15, 2026

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

July 15, 2026

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.