உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
அதே பரபரப்பில் தனது இரண்டாம் படத்திலும் முதல் படம் போல் இல்லை என்றாலும் ஓரளவுக்கு பரபரப்பாக ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட படமே கர்ணன்.
இப்பொழுது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய அவரது மூன்றாம் படமான மாமன்னன் ஜூன் 29 இல் திரையரங்குகளில் வெளியாககிறது என்ற அறிவிப்பு வந்த நிலையில் திடீரென்று இயக்குனர் மாரி செல்வராஜ் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் பரதன் இயக்கிய ‘தேவர் மகன்’ படம் பற்றி தனது கருத்து என்று (தவறான) கருத்தை தெரிவித்தார்.இது கமல் ரசிகர்களையும், தேவர் மகன் படம் பார்த்து அருமையான படம் என்று தலையில் வைத்து கொண்டாடிய மக்களையும் அதிகமாக கோபப்படுத்தியது.
அவர்கள் தங்களது சகட்டுமேனிக்கு மாறி செல்வராஜை சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.
மாமன்னன் படத்தின் விளம்பர நிகழ்விற்காக ஒரு youtube சேனலில் நீயா நானா கோபிநாத் தொகுப்பாளராக பங்கு பெற்ற அந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் பற்றி சில உண்மை தகவல்களை தெரிவித்தார்.தொகுப்பாளர் கோபிநாத் கேள்வி கேட்கும் பொழுது தளபதி விஜய்க்கும் உங்களுக்கும் நல்ல நட்பு உணர்வு இருந்தது சற்று இடையில் என்ன நடந்தது இருவரும் பேசிக் கொள்வதில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்.
அதெல்லாம் ஒன்னும் இல்லை சிறிது நாட்களாக பேசிக் கொள்வதில்லை.ஆனால் சில நாட்களுக்கு முன்பு எங்களது குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தார் தளபதி விஜய் அவர்களுடன் நான் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன் அப்பொழுது கூட எனது எம்எல்ஏ பணியை பற்றி பேசினார் ‘எப்பா பயங்கரமா பண்றப்பா’ அப்படின்னு சொன்னார் இது உண்மை என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் நான் அந்த படம் நிச்சயமா பண்றதா தான் இருந்தது இவரு பக்கத்தில் இருந்த மாரி செல்வராஜ் காண்பித்து இல்ல சார் என் படம் தான் கடைசி படமா இருக்கணும் நீங்க அந்த கதையை ஒத்துக்க கூடாது என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.படத்தில் வடிவேலு எப்படி வந்தார் என்ற கோபிநாத் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலினும் மாறி செல்வராஜூம் அவர் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காமெடியன் அவரை வைத்து என்னால் தீனி போட முடியாது என்று மாரிசெல்வராஜ் சொன்னதாகவும் உதயநிதி ஸ்டாலின் இல்ல சார் இந்த படம் இவரை வைத்து பண்ணலாம் நல்லா இருக்கும் என்று சொன்ன பிறகே வடிவேலு முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அதன் பிறகு மாரி செல்வராஜ்யிடம் கேள்வி கேட்ட கோபிநாத் மூன்றாவது படமாக இந்தப் படத்தை தான் இயக்குவது என்று முடிவு செய்து உதயநிதியை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த மாரி செல்வராஜ்.
ஆனால் இவ்வளவு சீரியசான கதையை தேர்வு செய்ய மாட்டார் என்னை எப்படியும் திருப்பி அனுப்பி விடுவார் என்ற நோக்கத்திலேயே கதை சொல்ல சென்றேன்.ஆனால் நான் நினைத்ததற்கு நேர் மாறாக நடந்தது நான் கூறிய மாமன்னன் கதை உதயநிதி சாரை வெகுவாக கவர்ந்தது இந்த கதையே படமாக பண்ணலாம் நான் நடிக்கிறேன் என்று உறுதி அளித்தார்.









