• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாரி செல்வராஜ் பற்றிய உண்மைகளை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..!

by Tamil2daynews
June 29, 2023
in சினிமா செய்திகள்
0
மாரி செல்வராஜ் பற்றிய உண்மைகளை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..!
0
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாரி செல்வராஜ் பற்றிய உண்மைகளை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..!
நான் நடிப்பை விட்டதற்கு மாரி செல்வராஜ் தான் காரணம்..!

உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.அந்தப் படம் பல்வேறு விருதுகளை வென்று கடைக்கோடி மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதே பரபரப்பில் தனது இரண்டாம்  படத்திலும் முதல் படம் போல் இல்லை என்றாலும் ஓரளவுக்கு பரபரப்பாக ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட படமே கர்ணன்.

அந்தப் படத்தில் ஒரு ஊரில் நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை படமாக்கி இருப்பார் ஆனால்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த படம் பார்த்துவிட்டு இந்த சம்பவம் நடந்த ஆண்டு வேறு நீங்கள் காண்பித்து இருப்பது வேறு என்று ஒரு விளக்கத்தையும் அப்போது கூறியது அப்போதைய நாளிதழ்களில் வந்தது அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய அவரது மூன்றாம் படமான மாமன்னன் ஜூன் 29 இல் திரையரங்குகளில் வெளியாககிறது என்ற அறிவிப்பு வந்த நிலையில் திடீரென்று இயக்குனர் மாரி செல்வராஜ் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் பரதன் இயக்கிய ‘தேவர் மகன்’ படம் பற்றி தனது கருத்து என்று (தவறான) கருத்தை தெரிவித்தார்.

இது கமல் ரசிகர்களையும், தேவர் மகன் படம் பார்த்து அருமையான படம் என்று தலையில் வைத்து கொண்டாடிய மக்களையும் அதிகமாக கோபப்படுத்தியது.

அவர்கள் தங்களது சகட்டுமேனிக்கு மாறி செல்வராஜை சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.

இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் பொழுது அனைவருக்கும் ஒரு கேள்வி என்னவென்றால் மாமன்னன் இசை வெளியீட்டுக்கு சிறப்பு விருந்தினராக வந்த கமல் சாரையே இப்படி கலாய்த்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் திடீரென்று ரிலீஸ் க்கு ஒரு நாள் முன்னாடி உலக நாயகனை அழைத்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் படத்தை திரையிட்டு காண்பிக்க அவரும் படம் பார்த்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளையும்
தெரிவித்ததோடு இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் உதயநிதி ஸ்டாலின்.
மாமன்னன் படத்தின் விளம்பர நிகழ்விற்காக ஒரு youtube சேனலில் நீயா நானா கோபிநாத் தொகுப்பாளராக பங்கு பெற்ற அந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் பற்றி சில உண்மை  தகவல்களை தெரிவித்தார்.

தொகுப்பாளர் கோபிநாத் கேள்வி கேட்கும் பொழுது தளபதி விஜய்க்கும் உங்களுக்கும் நல்ல நட்பு உணர்வு இருந்தது சற்று இடையில் என்ன நடந்தது இருவரும் பேசிக் கொள்வதில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை சிறிது நாட்களாக பேசிக் கொள்வதில்லை.ஆனால் சில நாட்களுக்கு முன்பு எங்களது குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தார் தளபதி விஜய் அவர்களுடன் நான் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன் அப்பொழுது கூட எனது எம்எல்ஏ பணியை பற்றி பேசினார் ‘எப்பா பயங்கரமா பண்றப்பா’ அப்படின்னு சொன்னார் இது உண்மை என்று தெரிவித்தார்.

அடுத்த கேள்வி கேட்ட தொகுப்பாளர் கோபிநாத் கமலஹாசன் தயாரிப்பில் நீங்கள் நடிப்பதாக இருந்த படம் என்ன ஆச்சு என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் நான் அந்த படம் நிச்சயமா பண்றதா தான் இருந்தது இவரு பக்கத்தில் இருந்த மாரி செல்வராஜ் காண்பித்து இல்ல சார் என் படம் தான் கடைசி படமா இருக்கணும் நீங்க அந்த கதையை ஒத்துக்க கூடாது என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

படத்தில் வடிவேலு எப்படி வந்தார் என்ற கோபிநாத் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலினும் மாறி செல்வராஜூம் அவர் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காமெடியன் அவரை வைத்து என்னால் தீனி போட முடியாது என்று மாரிசெல்வராஜ் சொன்னதாகவும் உதயநிதி ஸ்டாலின் இல்ல சார் இந்த படம் இவரை வைத்து பண்ணலாம் நல்லா இருக்கும் என்று சொன்ன பிறகே  வடிவேலு முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அதன் பிறகு மாரி செல்வராஜ்யிடம் கேள்வி கேட்ட கோபிநாத் மூன்றாவது படமாக இந்தப் படத்தை தான் இயக்குவது என்று முடிவு செய்து உதயநிதியை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த மாரி செல்வராஜ்.

இல்ல சார் நான் மீண்டும் தனுஷ் அவர்களை வைத்து படம் இயக்க ரெடியாக இருந்த நிலையில் உதயநிதியை சந்தித்து கதை சொல்ல நேரிட்டது.
ஆனால் இவ்வளவு சீரியசான கதையை தேர்வு செய்ய மாட்டார் என்னை எப்படியும் திருப்பி அனுப்பி விடுவார் என்ற நோக்கத்திலேயே கதை சொல்ல சென்றேன்.ஆனால் நான் நினைத்ததற்கு நேர் மாறாக நடந்தது நான் கூறிய மாமன்னன் கதை உதயநிதி சாரை வெகுவாக கவர்ந்தது இந்த கதையே படமாக பண்ணலாம் நான் நடிக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

அதன் பிறகு இல்லை சார்  தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கி உள்ளேன் என்று கூறிய பிறகு அந்த தயாரிப்பாளர்களிடம் இவராக பேசி சிறிது நாட்கள் காத்திருங்கள் இவர் வந்துவிடுவார் என்று எனக்காக கூறினார்.அதன் பிறகு தான் ‘மாமன்னன்‘ வேலைகள் ஆரம்பமானது இன்று படமும் உலகெங்கும் வெளியாகி உள்ளது.
                                      பதிவு
                                      சரண்
Previous Post

மாமன்னன் படம் எப்படி இருக்கு..!

Next Post

‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

Next Post
Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும், அட்டகாசமான டீசர் வெளியானது !

'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

July 15, 2026

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

July 15, 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

July 15, 2026

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

July 15, 2026

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.