• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்!

by Tamil2daynews
July 3, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்!

 

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’,  ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, ‘அலா வைகுண்டபுரமுலு’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்தது.

இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக தாங்கள் இணைந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இந்த முறை தெலுங்கு பார்வையாளர்களுடன் உலக சினிமா பார்வையாளர்களையும்  மகிழ்விக்கும் படமாக இது இருக்கும் என்றும் இந்த கூட்டணி உறுதியளிக்கிறது.

‘அலா வைகுண்டபுரமுலு’ படத்தில் இருந்து ‘சமஜவரகமனா, புட்ட பொம்மா, ராமுலோ ராமுலா’ ஆகிய பாடல்கள் ஜென் Z மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது, ​​இந்தியத் திரைகளில் இதுவரை பார்த்திராத காட்சியைக் (Never before seen Visual Spectacle) கொண்டு வர இந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
Imageஉலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு  பொழுதுபோக்கையும் புதிய அனுபவத்தையும் தருவதை படக்குழு உறுதியளிக்கிறது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் கதை சொல்லும் திறமை இந்தக் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்தையும் மறக்க முடியாததாக ஆக்கியுள்ளது. ‘ரவீந்திர நாராயண்’,  ‘விராஜ் ஆனந்த்’ மற்றும் ‘பாண்டு’ போன்ற பாத்திரங்களில் நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்ந்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் நடிப்பும் உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன.

ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் மீண்டும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் அவர்களின் எட்டாவது பட தயாரிப்புக்காக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான முந்தைய மூன்று படங்களையும் மிகப்பெரிய பொருட்செலவில் ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்போது, ​​தயாரிப்பு மதிப்புகளை இன்னும் அதிகமாக்கி, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பார்வையாளரையும் திருப்திப்படுத்த உலக அளவிலான தயாரிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான கீதா ஆர்ட்ஸ் பேனர், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் உடன் தயாரிப்பில் இணைகிறது. இதற்கு முன்பு இவர்கள் ‘அலா வைகுந்தபுரமுலு’ படத்திலும் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.
Previous Post

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு, தீபாவளி 2023 திரை விருந்தாக தயாராகிறது

Next Post

சாதனைப் படத்தில் மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா

Next Post

சாதனைப் படத்தில் மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.