• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

by Tamil2daynews
July 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது.

ரன்பீர் கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘அனிமல்’. இந்தத் திரைப்படம் தற்போது எதிர்வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெள்ளி திரையில் வெளியாகவிருக்கிறது. திருத்தி அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய வெளியீட்டு தேதியில் சிறந்த உள்ளடக்கத்துடனும், தரமான பிரம்மாண்டத்துடனும் வெளியாகிறது என்ற உறுதிமொழியுடன் வருகிறது.

விதிவிலக்கான பாணியில் கதை சொல்வதில் தனித்துவமான அடையாளத்தை பெற்றவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. ஒரு மறக்க இயலாத சினிமா அனுபவத்தை காட்சியாகவும், கேட்கக் கூடியதாகவும் வழங்குவதற்கான தனது முழுமையான அர்ப்பணிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைதள பக்கத்தில் அவருடைய பதிவின் மூலம் அவர், அனிமல் மீதான தனது ஆர்வத்தையும், ஐந்து மொழிகளிலும் சமமான தாக்கம் மற்றும் சக்தி வாய்ந்த பாடல்களுடன் படத்தின் மேம்பட்ட பதிப்பு தயாராகியிருக்கிறது என பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த கூடுதல் நேரம்… படத்தின் ஒவ்வொரு அம்சமும் மிக உயர்ந்த தரத்தை கொண்டிருக்கிறது என்பதனை உறுதி செய்து, உள்ளடக்கத்தை மேலும் செழுமைப்படுத்தவும், சிறப்பானதாக மாற்றவும் குழுவை அனுமதித்திருக்கிறது.

அனில் கபூர், ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தானா, பாபி தியோல், திரிப்தி திம்ரி உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள். இந்த கிளாசிக் கதையை பிரபல தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது.

‘அனிமல்’ திரைப்படத்தை டி-சிரீஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் & கிரிஷன்குமார், சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முராத் கெடானி மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸின் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
Previous Post

வெற்றிகரமான இரண்டாவது வாரத்தில் ‘அஸ்வின்ஸ்’..!

Next Post

“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Next Post
“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Popular News

  • ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.