தொட்டதெல்லாம் வெற்றி, இவருக்கு மட்டும் எப்படி சாத்தியம்..!
கால் வைத்தால் வெற்றி அந்தப் பெயருக்கு சொந்தக்காரர் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள்.
பல வெற்றி படங்களை தயாரித்தும், கஷ்டப்படும் தயாரிப்பாளர்களை தானே முன்வந்து உங்கள் படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று ஆர்வமாக களமிறங்கி அவர்களுக்கு உதவி செய்வதில் பெருமைக்குரியவர் தனஞ்செயன்.
தமிழ் சினிமாவில் இசை, நடிப்பு, படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பிசியாக பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி, அண்மையில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தொடர்ந்து ‘கொலை’, ‘ரத்தம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்’ உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் கொலை படம் வருகிற 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ தயாரிப்பில் பாலாஜி கே. குமார் இயக்க கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான போர்தொழில் படத்தில் சரத்குமாருக்கு அசிஸ்டண்டாக அசோக் செல்வன் வருவார். அதே போல் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு அசிஸ்டண்டாக ரித்திகா சிங் வருகிறார். இதை நாங்கள் முதலிலேயே எடுத்துவிட்டோம். ஆனால் போர்தொழில் இப்படத்துக்கு முன்னதாக வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் கொலையாளியை முதலிலேயே காண்பித்து அவர் எப்படி இந்த கொலையை செய்திருப்பார் என்ற கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இது பார்ப்பதற்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.பொதுவாக இவர் கலந்து கொள்ளும் பட விழாக்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொகுப்பாளருக்கு வேலையே இருக்காது ஏனென்றால் அதையும் தானே முன்வந்து செய்து முடிப்பதில் பலே வல்லவர்.









