தொட்டதெல்லாம் வெற்றி, இவருக்கு மட்டும் எப்படி சாத்தியம்..!
கால் வைத்தால் வெற்றி அந்தப் பெயருக்கு சொந்தக்காரர் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள்.
பல வெற்றி படங்களை தயாரித்தும், கஷ்டப்படும் தயாரிப்பாளர்களை தானே முன்வந்து உங்கள் படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று ஆர்வமாக களமிறங்கி அவர்களுக்கு உதவி செய்வதில் பெருமைக்குரியவர் தனஞ்செயன்.
கடைசியாக இவரது மேற்பார்வை வெளிவந்த சிம்புவின் ‘பத்து தல’ இமாலய வெற்றி பெற்றதும்.
அந்த வெற்றிக்கு 90% இவரின் விளம்பர யுக்திதான் காரணம் என்று அனைவரும் அறிந்ததே. இப்பொழுது விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் ஜூலை 21ஆம் தேதி வெளியாகும் ‘கொலை’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.
தமிழ் சினிமாவில் இசை, நடிப்பு, படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பிசியாக பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி, அண்மையில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தொடர்ந்து ‘கொலை’, ‘ரத்தம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்’ உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் கொலை படம் வருகிற 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ தயாரிப்பில் பாலாஜி கே. குமார் இயக்க கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லிங்குடன் சொல்லியிருப்பது போல் உருவாகியுள்ளது இப்படம். இப்படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன், “இப்படத்தில் வித்தியாசமான முறையில் ஒளிப்பதிவு, சிஜி உள்ளிட்ட துறைகளில் முயற்சி செய்துள்ளோம். இயல்பாக இருந்த காட்சிகள் சிஜி செய்யப்பட்டவுடன் வேறு விதமாக பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. கண்டிப்பாக ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். இதுவரை எந்த படத்திலும் பார்க்காத விஷயம் இதில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான போர்தொழில் படத்தில் சரத்குமாருக்கு அசிஸ்டண்டாக அசோக் செல்வன் வருவார். அதே போல் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு அசிஸ்டண்டாக ரித்திகா சிங் வருகிறார். இதை நாங்கள் முதலிலேயே எடுத்துவிட்டோம். ஆனால் போர்தொழில் இப்படத்துக்கு முன்னதாக வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் கொலையாளியை முதலிலேயே காண்பித்து அவர் எப்படி இந்த கொலையை செய்திருப்பார் என்ற கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இது பார்ப்பதற்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.
பொதுவாக இவர் கலந்து கொள்ளும் பட விழாக்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொகுப்பாளருக்கு வேலையே இருக்காது ஏனென்றால் அதையும் தானே முன்வந்து செய்து முடிப்பதில் பலே வல்லவர்.
‘போர் தொழில்’ வெற்றியை கடந்து இந்த ‘கொலை’ இமாலய வெற்றி அடைய போவது நிச்சயம்..!