• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘டைனோசர்ஸ்’ – விமர்சனம்

by Tamil2daynews
July 27, 2023
in விமர்சனம்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘டைனோசர்ஸ்’ – விமர்சனம்

 

எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம்  டைனோசர்ஸ்.

ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிடுகிறது. போபோ சசி இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளியீட்டுக்கு முன்பே கோலிவுட் வட்டாரத்தினரின் பாராட்டுகளை அள்ளி கவனம் ஈர்த்தது இப்படம்.

வட சென்னை’ மணம் கமழ ‘கத்தி பிடிக்காதீங்க’ என சொல்லும் மற்றுமொரு கேங்ஸ்டர் பாணி கதை. சென்னை தமிழும் லந்துமாக அலையும் ஏரியா இளைஞர்கள் லோக்கல் ரவுடியான ‘சாலையார்’ கேங்குக்காக வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.  இவர்களில் வயதுக்குரிய சேட்டைகள், அட்டாகசங்கள் செய்வதுடன் நிறுத்திக் கொண்டு சம்பவக் காரர்களிடம் இருந்து கவனமாக தப்பி  வாழ்ந்து வருகிறார் ‘டைனோசர்ஸ்’ –  ‘Die No Sirs’ எனும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நாயகன் மண்ணு என்கிற ‘ஆற்றல் மண்’ (உதய் கார்த்திக்).
வரன் கேட்டு செல்லும் மணப்பெண் தன் நண்பனை பார்ப்பதை அறிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடங்கி,  ‘புது மாப்பிள்ளை’ நண்பனுக்காக ஜெயிலுக்கு போவது வரை நட்புக்கு இலக்கணமாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா (ரிஷி).

சாலையார் கேங் என்றோ செய்த கொலைக்காக போலியாக ‘ஏரியா பசங்க’ சரண்டராகும் சூழல் ஏற்பட,  நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழும் மண்ணுவின் அண்ணன் தனா, புதிதாக திருமணமான தன் நண்பன்  துரைக்கு பதிலாக ஜெயிலுக்கு போக நேர்கிறது.

இந்நிலையில் போலீஸிடமே லந்து பேசி சுத்தமான கைகளுடன் ஏரியாவில் வலம் வரும் மண்ணுவையும், புதிதாக திருமணமான துரையையும் கேங்  வாருக்குள் கொண்டு வர சாலையார் கோஷ்டி நினைக்கிறது. இதனை அடுத்து நடப்பது என்ன? ஜாலி இளைஞனாக ஏரியாவுக்குள் வலம் வரும் நாயகன் மண்ணு சந்திக்கும் பின் விளைவுகள் என்ன என்பதை விறுவிறு பாணியில், தெறிக்கும் வசனங்களுடன் கமர்ஷியல் படமாக தந்திருக்கிறார்கள்!
தமிழ் சினிமாவில் வட சென்னை பேக் ட்ராப்பில் வாள் பிடித்த கேங்ஸ்டர் கதைகளை பல படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் இது நிச்சயம் ஒரு புது அனுபவம். வட சென்னை, மெட்ராஸ் போன்ற படங்களுக்குப் பிறகு,  அத்தனை புதுமுகங்களுடன், சென்னை தமிழும் லந்தும் வசனத்துக்கு வசனம் தெறிக்க, நிச்சயம் தவற விடக்கூடாத ராவான அனுபவம்!

“என் கையிலேயே பொருள கொடுக்கப் பாக்கறீங்களா” என எந்த கேங்கிலும் சிக்காமல் அட்ராசிட்டி செய்தபடி, உஷாராக வலம் வரும் நாயகன் மண்ணுவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக். தொடக்கத்தில் ‘இவர் ஓகேவா’ என கொஞ்சம் சந்தேகம் வரவழைத்தாலும்,  சென்னைபூர்வக் குடி நபராகவே மாறி தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து கதையையும் தாங்கி இருக்கிறார்.

ஆரம்ப கால விஜய் சேதுபதியை பிரதிபலிக்கும் புதுமாப்பிள்ளை துரையாக மாறா. விஜய் சேதுபதியை போலவே பயணம் சிறக்க வாழ்த்துகள். மண்ணுவின் அண்ணன் தனாவாக நடித்திருக்கும் ரிஷி, சாலையாறாக நடித்திருக்கும் மணேக்‌ஷா ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சரியாகப் பொருந்தியிருக்கிறார்கள்
தமிழ் சினிமாவின் வழக்கமான பொம்மை நாயகி வேடத்தில் சாய் ப்ரியா. ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஸ்கோப் இல்லை. மண்ணுவின் அம்மாவாக வரும் ஜானகி கதைக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

முதல் கொஞ்ச நிமிடங்களுக்குப் பிறகு சூடு பறக்க தட்டி எழும்பும் முதல் பாதி. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு நிகழும் அந்த மர்டர் ஸ்கெட்ச் காட்சி பரபரப்பின் உச்சம்! கோலிவுட்டின் தரமான இண்டர்வெல் ப்ளாக் காட்சிகளில் இது நிச்சயம் இடம்பெறும்.

மொத்தத்தில் வட சென்னை பேக்ட்ராப்பில் அமைந்த தவிர்க்க முடியாத படங்களில் டைனோசர்ஸ் இடம் பிடித்துள்ளது. நல்வரவு!
Previous Post

மிஸ்கின் போல திறமையானவர் ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு

Next Post

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஒ டி டி யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்…

Next Post

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஒ டி டி யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்...

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.