• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் நாக சைதன்யா – சந்து மொண்டேட்டி- பன்னி வாஸ் – கீதா ஆர்ட்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘NC 23’ எனும் திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தளத்தை பார்வையிட்ட படக்குழு.. அதனை ‘தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்’ எனும் பெயரில் ஆவண படமாக உருவாக்கி இருக்கிறது.

by Tamil2daynews
August 8, 2023
in சினிமா செய்திகள்
0
அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் நாக சைதன்யா – சந்து மொண்டேட்டி- பன்னி வாஸ் – கீதா ஆர்ட்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘NC 23’ எனும் திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தளத்தை பார்வையிட்ட படக்குழு.. அதனை ‘தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்’ எனும் பெயரில் ஆவண படமாக உருவாக்கி இருக்கிறது.
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் நாக சைதன்யா – சந்து மொண்டேட்டி- பன்னி வாஸ் – கீதா ஆர்ட்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘NC 23’ எனும் திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தளத்தை பார்வையிட்ட படக்குழு.. அதனை ‘தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்’ எனும் பெயரில் ஆவண படமாக உருவாக்கி இருக்கிறது.

ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே… அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற அசலான இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் வழிகாட்டுதலின் கீழ் கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள், அனைத்து தடை கற்களையும் அகற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் படத்தின் முன் தயாரிப்பை தொடங்குவதற்கு ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள். ‘NC23’  படக்குழுவினர் ஆந்திராவின் கடலோரப் பகுதியை ஆய்வு செய்து, ஸ்ரீகாகுளத்தில் உள்ள கே. மச்சிலேசம் எனும் கிராமத்திற்கு சென்றனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் பன்னி வாஸ் பேசுகையில், ” இந்த படத்தின் கதையை ஹைதராபாத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யக்கூடாது என்பதில் இயக்குநர் உறுதியாகவும், ஆர்வமாகவும் இருந்தார். மக்கள் மற்றும் சூழலை ஆய்வு செய்து இந்த படத்தின் முன் தயாரிப்பை கவனத்துடன் முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.
Imageஇயக்குநர் சந்து மொண்டேட்டி பேசுகையில், ”இந்த கிராமத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு நிமிடத்தின் விவரங்களையும் உற்று கவனித்த பிறகு தான், எங்களின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்குகிறது” என்றார்.

நாயகன் நாக சைதன்யா பேசுகையில்,
” இந்த கிராமத்திலுள்ள கதாபாத்திரங்களை சந்திக்கவும், அவர்களின் உடல் மொழியை படிக்கவும், கிராமத்தின் நிலவியல் அமைப்பை அறிந்து கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ளவும் நாங்கள் இங்கு வருகை தந்திருக்கிறோம்” என்றார்.

இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ‘NC 23 ‘பட குழுவினர் மீனவர்களின் தொழில் சார்ந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள அவர்களுடன் கடலுக்குள் சென்றனர்.

இந்த முழு பயணமும் ‘தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்’ எனும் பெயரில் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான பயணம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

தெலுங்கு திரையுலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் படப்பிடிப்பை தொடங்கும் ஒரு நாயகன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மக்களுடன் உரையாடினார். முன் தயாரிப்பு வேலைகளிலும் படத்தின் நாயகனான நாக சைதன்யா தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Previous Post

ஆரம்பமானது “ஜவான்” கவுண்டவுன்!! காத்திருங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளித்திரையில்!!

Next Post

மைக்கேல் எனும் Multi Talented

Next Post

மைக்கேல் எனும் Multi Talented

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.